ஃபீனிக்ஸ்

சிறகுகள் முறித்தாய் என்
சிந்தனைகளில் சிறகடித்தேன்
கனவுகள் தகர்த்தாய்
அஸ்திவாரத்தை ஆழப்படுத்தினேன்
உன் கேள்விகளுக்கு பதிலாய்
எப்போதும் என் மௌனங்கள்
உன் வார்த்தை நெருப்புகள்
உருவாக்கும் காயங்கள்
கனன்று கங்குகள் ஆறுமுன்னே
அடுத்த அம்பை எய்கிறாய்
என்னை வீழ்த்திய வெற்றி
வெறியாய் உன் கண்களில்

ஜெய்த்துவிட்டதாய்
மனக்கோட்டை கட்டாதே
சாம்பலில் இருந்து
மீண்டு மீண்டும் நான்
உன் முன்னால்
விஸ்வரூபமாய்..

எழுதியவர் : இவானா (20-Nov-20, 11:57 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 142

மேலே