அப்பா

அகத்தில் அன்பு எனும் பூ வளர்த்து
முகத்தில் கண்டிப்பு எனும் முட்களை காட்டுபவர் அப்பா

தன் குடும்பம் பிழைக்க
பிள்ளைகளின் எதிர்காலம் தழைக்க
உழைத்து உருக்குலைந்தவர் அப்பா

இம்மண்ணில் அப்பாக்களைப்போல்
நாயகர்கள் வேறொருவர் இல்லை
ஒவ்வொரு பிள்ளைகளின் முன்மாதிரி அப்பாக்களே

வியர்வை வாசத்தை தனக்குள் வைத்துக்கொண்டு
பிள்ளைகளுக்கு நறுமணத் தைலம்
பூசுபவர் அப்பா

பிள்ளைகள் சிகரங்களைதொட
தங்களையே படிகளாக்கி கொண்டவர்கள் அப்பாக்கள்

உலகில்
அப்பாக்களே மிகச்சிறந்த
ஆசான்கள்
அப்பாக்களே மிகச்சிறந்த
வழிகாட்டிகள்
அப்பாக்களே மிகச்சிறந்த
ஆளுமைகள்
அப்பாக்களே மிகச்சிறந்த
தெய்வம்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Nov-20, 3:34 am)
Tanglish : appa
பார்வை : 3154

மேலே