தமிழா தமிழா தமிழா
தமிழா தமிழா தமிழா
நேரிசை ஆசிரியப்பா
தமிழன் என்பவன் தமிழோத வேண்டும்
தமிழாம் தேவாரம் திருவசகம் தானது
தேவாரம் வாசகம் இலாத்தமிழ் ஏதடா
தமிழ்தமிழ் எனத்தமி ழனாகான் சொல்வேன்
தமிழ்தமிழ் என்பான் குழிவெட் டுவான்பார்
தமிழ்தமிழ் என்பான் வேற்று மதத்தான்
தமிழ்தமிழ் எனத்தமி ழனைவெறி யேத்துவன்
தமிழ்தமிழ் என்பான் கந்தனைத் தொழான்பார்
தமிழ்தமிழ் என்பான் யேது கடவுள் என்பான்
தமிழன் அறிவான் முருகனேத் தமிழென
தமிழையும் முருகையும் பிரிக்கவும் முடியா
தமிழனை அடையாளம் கண்டிடு
தமிழனிலாப் பிறரையும் துரத்துநீ தூரமே
....