இடிதாங்கி

இடிதாங்கி
🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼
அன்பரசன் மங்கை என்று
அழகாக சிறு குடும்பம்
அரம்புக்காரக் குழந்தையொன்றும்
அக்குடும்பத்திலே பிறந்திருக்க

மதுவென்ற நோனாரை
மரை முகமாய் நட்பாக்கி
வயிறு முட்ட குடித்து விட்டு
வாகனத்தில் முடுகு காட்ட

ஐயோ என்ற சத்தத்தோடு
அன்பரசன் தபுதலாலே
உடல் தாண்டி மூளைக்குள்ளும்
ஊறுப்பட்ட இரத்தப் பொசிவு

மங்கை நெற்றி மனாலம்
மறுநாளே அழிந்து விட
மயானம் சில நொடியில்
உடல் எரித்து நீறு தர

அன்பரசன் துணையிழந்து
அக்குடும்பம் போழ்வு பெற
மங்கையின் நீர் குழிசி
மண்ணிலே வீழ்ந்துடைய

தாங்கொனாத் துன்பத்திலும்
தன் குழவிக்காய் வீறு கொண்டு
மிஞிறு போல் கருநிலத்திலும்
மீட்டெடுத்தாள் பெரு விளைச்சல்.....
க.செல்வராசு
கபிலக்குறிச்சி
9442987922
🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼🗼

எழுதியவர் : க.செல்வராசு (23-Nov-20, 6:38 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : idithangi
பார்வை : 126

மேலே