ஆரோக்கியம் கவிஞர் இரா இரவி

ஆரோக்கியம் ! கவிஞர் இரா. இரவி

*****
கோடிப் பணங்கள் சொத்துக்களை விட
குடும்ப ஆரோக்கியம் பெரிதென உணர்ந்தோம்!

உடல்நலம் உள்ள நலம் சார்ந்தது
உணர்ந்து உள்ளநலம் பேணினோம்!

கைகளைக் கழுவிட சலிக்கவில்லை
கவசம் முகத்தில் அணிந்திட்டோம்!

கொரோனா கொண்டு போனது பல உயிரை
கட்டுப்பாடாக இருந்ததால் உயிர் தப்பினோம்!

வெளியில் கண்டதெல்லாம் உண்பதைத் தவிர்த்தோம்
வீட்டில் விரும்பியதை செய்து உண்டோம்!

சுத்தம் சுகம் தரும் என்பதை அறிந்தோம்
சுத்தமாக இடங்களை அனைத்தையும் வைத்தோம்!

சத்தான உணவுகளை விரும்பி சாப்பிட்டோம்
சத்தற்ற சக்கைகளை தவிர்த்து விட்டோம்!

விழிப்புணர்வுடன் வாழப் பழகி விட்டோம்
வேண்டாத கெட்டப் பழக்கங்களை விட்டுவிட்டோம்!

நம் வாழ்வு நம் கையில் என்பதை உணர்ந்தோம்
நாளும் எந்நாளும் கவனமாக இருந்தோம்!

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
நோயின்றி வாழ வழிவகை செய்தோம்!

--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (26-Nov-20, 6:53 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 72

மேலே