அறிவேக் கடவுள்

அறிவேக் கடவுள்


நேரிசை வெண்பா

உலக இயக்கப் பிரபஞ்ச மொத்து
கலந்த அனைத்துமைம் பூதம் -- நிலமில்லை
அத்தனைக் கோளிலும் அப்படி விஞ்சானம்
பித்தன் விளைவிப் படா

நேரிசை வெண்பா

கடவுளடா விஞ்சா னமான கடவுள்
விடப்பெரிதாய் வேறெங்கு காண்டாய் -- கடந்தநாளில்
எம்முனிகள் சொல்லி இருந்தார் பலநூலில்
எம்மதமெல் லாம்விஞ்சா னம்நேரிசை வெண்பா


அறிவே கடவுள் அதுவே ஞானம்
அறிந்தார் நமது ரிஷிகள் -- அறிவாய்
தமிழை படைத்த அகத்யர் ரிஷிதான்
தமிழ்மொழி நூலில்சொன் னார்


நேரிசை வெண்பா


முனிகள் ரிஷிகள் உலகில் தமிழர்
இனியும்நீர் ஏமாரா தீர்கள் --. இனிய
அகத்யர் கரூரார் இடைக்காட ரெல்லாம்
இகத்தில் தமிழ்முனிகள் சொல் இன்
நேரிசை வெண்பா


எமையும் படைத்த துபிரம்மன் பின்னே
எமைகாத் தளித்தவர் விஷ்ணு -- எமைப்பின்
எடுத்தனன் ஈசன் பிறவியை நீக்கி
கொடுத்தான் பரமன் யிடம்


நேரிசை வெண்பா


கீழேழ் உலகுடை மேலேழ் உலகுடை
யேழேழ் பதினான்கை காட்டினார் -- கீழேழ்
நரகென்றார் பாவிக்கே பாவித்தார் நல்லார்
நரர்க்குலகம் மேலேழ் நிலை


நேரிசை வெண்பாஇந்த விளக்கமெல்லாம் எம்மதம் சொன்னது
இந்து மதமே வழிகாட்டி -- விந்தையிதைக்
கண்டுமே சொன்னார் ரிஷிமுனி உண்மையை
கண்டு நிமிர்ந்திடடா நீ


...

எழுதியவர் : பழனிராஜன் (27-Nov-20, 6:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 172

மேலே