அம்மா
இருண்ட கருவறைக்குள் புரண்டு படுத்ததன்றி
அடைந்த சுகம் ஏதுமில்லை அன்னை முகம்
நினைவில் இல்லை
அம்மா என்று சொல்லும்போதே உள்ளுக்குள்
இனிக்கின்றதே அந்த சுகம் ஏன் எனக்கு இல்லை
ஏன் இந்த தண்டனை
ஒரு தடவை சொல்லிப்பார்க்கிறேன் அம்மா என்று
உண்மையிலேயே தித்திக்கின்றதே உண்மையா
சொல்லுங்களேன்
அம்மாவின் பேச்சு எப்படி இருக்கும் அம்மாவின்
கோபங்கள் எப்படி இருக்கும் அடிவாங்கி இருந்தால்
எப்படி இருந்திருக்கும்
எனக்கு வயது இரண்டாக இருக்கையில் உனக்கு வாழ்வு
முடிந்து போனது நான் வாங்கி வந்த வரமா
இது தெரியவில்லையே
என் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில்
நீ இல்லாத இடைவெளியை உணர்ந்தேன்
சுக்குநூறாகினேன்
அம்மா இல்லாமல் ஆண் பிள்ளைகள் கூட
வளர்ந்திடலாம் ஆனால் பெண் பிள்ளைகளுக்கோ
அம்மா வேண்டும்
பார்த்து பார்த்து வளர்க்கின்ற அம்மா பாதுகாத்து
அரவணைக்கின்ற அன்பான என் தெய்வம் அம்மா
அம்மா எங்கே
அம்மாவுடன் இருப்பவர்களே நீங்கள் தான்
கொடுத்து வைத்தவர்கள் அதனால் இருக்கும்போதே
அவளை பாதுகாத்திடுங்கள்
அம்மாவுடன் இருக்கும் அத்தனை பேருக்கும்
வாழ்த்துக்கள் என்றென்றும் அம்மாவுடனே நீங்கள்
அன்பாக வாழ்ந்திடுங்கள்.