முள் வேலி

அந்தி மாலை ஆறு மணி.
டீ கடையில் டீ அருந்தியபடியே
தன் சட்டை பையிலிருந்த தூண்டு சீட்டை எடுத்து கடைகாரரிடம் நீட்டி இந்த விலாசம் எங்க இருக்குனு சொல்லுங்க என்று கேட்டு கொண்டிருந்தார் 50வயது மதிக்கத்தக்க அந்த கிராமத்து முதியவர் .

அதை வாங்கி படித்து விட்டு இந்த ஹோட்டல் இங்க இல்வையே அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் போகனும் என்றார் .
உடனே டீ அருந்தி கொண்டிருந்த இன்னொருவர் எந்த ஹோட்டல் என கேட்டதும் .
பர்வதம் பவன் அதான் நாலு வழி சாலை சிக்னல் கிட்ட இருக்கே அதை கேட்குறார் என்றார் டீகடை கரார்.

உடனே அந்த நபர் பெரியவரை பார்த்து உங்கள பார்த்தா ஹோட்டலுக்கு போற ஆள போல தெரியலையே நீங்க ஹோட்டலுக்கு போகனுமா இல்லை அவங்க வீட்டுக்கு போகனுமா
என்ற உடன்.

பெரியவர் வீட்டுக்கு தான் போகனும் விலாசம் என்கிட்ட இல்லை அதான் ஹோட்டல்ல போயி விசாரிச்சுட்டு போகலாம்னு ஹோட்டல தேடிட்டு இருக்கேன் என்றார் .

உடனே டீ அருந்தி கொண்டிருந்தவர் இந்த சந்து திரும்புன உடனே வாசல்ல சார்மினர் பந்தல் போட்டிருக்கும் பாருங்க அது தான் அவங்க வீடு ஆனா அந்தம்மா இன்னைக்கு மதியம் இறந்துட்டாங்களே அது தெரியுமா என்றதும்.

பெரியவரின் கண்கள் கலங்க தெரியும்யா தெரிஞ்சு தான் கடைசியா ஒரு முறை பாருவ பாத்துட்டு போகலாம்னு வந்தேன் நானு பாரு சுந்தரம் எல்லாம் பள்ளியில ஒன்னா படிச்சவங்க என்று சொல்லிக்கொண்டே கடைகாரரிடம் காசை கொடுத்து விட்டு அவர் சொன்ன வழியை நோக்கி நடநது சென்றார் .

இவர் அங்கிருந்து நகர்ந்ததும் டீ கடை காரர் ஆமாம் யாரு இறந்ததுனு கேட்க .

டீ அருந்தி கொண்டிருந்தவர் அந்த ஹோட்டல் ஓனர்தான்யா அதான் புருஷன் செத்ததும் ஹோட்டல் மாஸ்டரே 20 வருஷமா வச்சிட்டு இருந்தாளே அவங்க பசங்க கூட அது தெரிஞ்சு வீட்டை விட்டு போயிட்டாங்களே பாகத்தை பிரிச்சுட்டு இப்போ மாஸ்டருக்கு தான் அடிச்சது யோகம் மொத்த சொத்தையும் எப்படியும் எழுதி வாங்கிட்டிருப்பானு சொல்விக்கொண்டே கணக்குல எழுதிக்கோ இதையும் என்று அங்கிருந்து நகர்ந்து சென்றார்

முதியவர் தெருமுனையை அடைந்ததும் அவர் கண்களிள் நீர் வழிய துவங்கியது .
பலவற்றை மனதில் எண்ணிகொண்டே வீட்டின் வாசலை சென்றடைந்தார்

அப்போது இவரை கண்டதும் உள்ளிருந்து ஓடி வந்து சோமு பாத்தியா நம்ம பாரு நம்மள விட்டு போயிட்டா என்று கட்டி அழ துவங்கினார்.

இவரும் அழுதபடியே அழாத சுந்தரம் பிறப்புனு ஒன்னு இருந்தாஇறப்பது நிச்சயம்.
அவ புண்ணியவதி அதான் எந்த அவஸ்தையும் இல்லாம சட்டுனு போயிட்டா அங்க பாரு தூங்குற மாதிரியே இருக்கா அவ இறந்துட்டானு சொன்னா யாராவது நம்புவாங்களா .

நாம எல்லாம் பண்ண பாவங்களுக்கு நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கு அதான் அவ நம்ம அனாதையா விட்டுட்டு போயிட்டா .

என் சொத்தையெல்லாம் வாங்கிட்டு என் பிள்ளைக அனாதையா விட்டுட்டு போகும் போது இவ தான் தன்னோட நிலங்களையும் பால் பண்ணையையும் பராமறிக்குற பொறுப்பை கொடுத்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தா ஆனா இனி என் நிலமை என்ன ஆகும்னு
தெரியலைனு சொல்லி அழ துவங்கினார் முதியவர் சோமு .

அப்போது யாரோ அழைக்க உடனே சுந்தரம் சரி நீ அங்க போயி உட்காரு காலையில பதது மணிக்குள்ள இறுதி ஊர்வலம் அதுக்கான வேலைகளை நான் பாக்குறேனு சொல்லிட்டு கண்ணீரை துடைத்து கொண்டே பரபரப்பானார் சுந்தரம் வந்தவர்களை கவனிப்பது, ஏற்பாடுகளுக்கா ஆட்களை வரவழைத்து பேசுவது என்று

இப்படியே அந்த நாள் முழுவதும் சுற்றி சுற்மி எல்லா வேலைகளையும் செய்வதுமாய் .
மரணித்தவரின் அருகில் அமர்ந்து அழுவதுமாய் இருந்தார் சுந்தரம் இருந்தாலும் .
மறுபுறம் இவர்களை புரளி பேசுவதை நிறுத்தவில்லை அங்கே கூடியிருந்த பங்கஜத்தின் உறவினர்களும் சுற்று புறத்தாரும்.

அதில் ஒருவர் அங்க பாரேன் அந்த ஆளை என் அம்மா சாவுக்கு கூட என் அப்பா இப்படி அழலை என்று கூற .உடனே உடனிருந்தவர் அட சும்மாவா இத்தனை சொத்தையும் அட்டய போடனும்னா கொஞ்சம் அழுது நடிச்சு தானே ஆகனும் என்றார்.

அதை கேட்டுக்கொண்டிருந்த பங்கஜத்தின் மூத்த மகன் சதீஷ் தனது தம்பி சுமனிடம் இதை எல்லாம் கேட்க வேணாம்னு தான் வரவேணாம்னு இருந்தேன் உன் அண்ணி உறவு உரிமை விட்டு கொடுக்க கூடாதுனு கூட்டிட்டு வந்துட்டா என்று கோவமாக கூறிக்ககொண்டிருந்தான்.

இப்படியாக அந்த இரவு சுந்தரத்தை சபிப்பதும் அவர்களை பற்றி புறம் பேசுவதுமாய் கடந்திருந்தது.
சிலர் சுந்தரத்தின் செவிபடவே அவர்களை புறம் பேச அதை கேட்டு கண்கள் கலங்கியபடி ஆகவேண்டிய காரியத்தை நல்லபடியாக முடிப்பதில் மட்டுமே கவனமாய் இருந்தார்.


காலை பத்து மணி அளவிள் இறுதி ஊர்வலத்திற்கு எல்லோரும் ஆயத்தமாக சுந்தரம் சதீஷிடம் சென்று அம்மாக்கு நீ தான் கொல்லி போடனும் இந்ந வேஷ்டிய கட்டிட்டு வா என்று சுந்தரம் கூற .

அவரை உக்கிரமான பார்வைகளாள் சுட்டெறித்தபடி பார்த்து நாங்க வேணாம்னு தானே அவங்க கடைசி வரை உங்க கூடவே இருந்தாங்க இப்போ மட்டும் நான் எதுக்கு அதையும் நீங்களே செய்திடுங்க என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.

சுந்தரம் சதீஷின் கால்களை பற்றிக்கொண்டு இதையெல்லாம் நாம நாளைக்கு தெளிவா பேசுவோம் அவளுக்கு நீயின்னா உயிரு தயவு செய்து அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்களை நல்லபடியா செய்து கொடு என கதறி அழுதார் .

சதீஷின் மனைவி நீங்க உங்க உரிமைய விட்டு கொடுக்க கூடாது நீங்க தான் இதெல்லாய் செய்யனும் என்று கூறி .

சுந்தரத்தின் கையிலிருந்த வேட்டியை வாங்கி சதீஷிடம் கொடுத்து இனி எதுனாலும் என்கிட்ட சொல்லுங்க அவர் உங்களை பார்க்க கூட விரும்பலை.

எனக்கும் உங்களை பிடிக்காதுதான் இருந்தாலும் ஒரு மகனா அவர் அம்மாக்கு செய்ய வேண்டியதை நான் விட்டுத்தர மாட்டேன் என்று கூறி சதீஷிடம் வேட்டியை கொடுத்தாள் .

அருகில் இருந்தவர்களும் சதீஷை வலியுறுத்த .இறுதியாக
சதீஷும் அதை வாங்கிகொண்டு இறுதி ஊர்வலத்துக்கு தயாரானான் .

ஒரு வழியாக எல்லா காரியங்களும் முடிந்து பங்கஜத்தின் உடலை எரித்து விட்டு வீடு திரும்பியதும்.
சதீஷும் சுமனும் அங்கிருந்து புறப்டப ஆயத்தமானார்கள் .

சுந்தரம் அவர்களருகில் வந்து என்னப்பா கிளம்பிட்டிங்க இன்னும் அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கு அதெல்லாம் முடிச்சிட்டு போறதுதானே என்றார்.

உடனே சதீஷின் மனைவி கலா அதெல்லாம் நாங்க எங்க வீட்ல இருந்தே கூட செய்துக்கலாம் எல்லாம் பெரியவங்க கிட்ட விசாரிச்சுட்டோம் நீங்க உங்க வேலைய பாருங்க எங்களுக்கு தெரியும் நாங்க என்ன செய்யனும்னு .

சுந்தரம் சரிமா இன்னைக்கு ஒரு நாளாவது தங்கிட்டு போகலாம் இல்லை

கலா எதுக்கு இனி என்ன வேலை இருக்கு இந்ந வீட்ல எங்களுக்கு இது உங்க வீடு நீங்க சந்தோஷமா ஆண்டனுபவியுங்க.

சுந்தரம் சரி இன்று மாலை வரையாவது இருந்துட்டு போங்க அவளோட அஸ்தி வேண்டாமா நீங்க எது ஒன்னும் செய்ய என்றவுடன் .

கலா ஒரு நிமிடம் யோசித்து சதீஷிடம் ஆமாங்க அஸ்தி வச்சு தான் நாம எல்லாமே செய்யனும் சாயங்காலமா கிளம்புவோம் என்று கூறி ஒரு வழியாக அனைவரும் மாலை வரை இருப்பதென முடிவு செய்தார்கள் .


மாலை ஐந்து மணி பங்கஜத்தின் வக்கில் வீட்டுக்கு நுழைந்து அனைவரையும் அழைத்து உயிலை படிக்க வேண்டும் .
சுந்தரம் இந்தாங்க இதை நீங்களே படிங்க என உயிலை சுந்தரத்திடம் கொடுத்தார் .

சதீஷூம் ,சுமனும் வக்கீலை பார்த்து அதுல என்ன இருக்கும்னு எங்களுக்கு தெரியும் எதுக்கு தேவை இல்லாம சோழிய உருட்டிட்டு .
எங்களுக்கு சேர வேண்டியது அவங்க போனதுக்கு பிறகு எங்களுக்கு கிடைக்காதுனு தெரிஞ்சு தான் எங்க அம்மா அப்பவே பிரிச்சு கொடுத்துட்டாங்க

எங்களுக்கு அதே போதும் எதையும் படிச்சு காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறி அங்கிருந்து நகர தொடங்கினான் .

வக்கீல் அவனை வழி மறித்து
இருப்பா ஏன் அவசரபடுற நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு இத்தனை நாள் பொறுத்த இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையா இரு உனக்கு எல்லா விவரமும் புரியனும்னா சுந்தரம் சார் நீங்க சொல்ல நினைச்சத சொல்லி முடிங்க என்று சொல்லி இருக்கையில் அமர்ந்தார் .

சுந்தரம் இப்போது பேச துவங்கினார் .
சதீஷ் நீ சொன்னது உண்மை தான் இந்த உயிலை படிக்கவேண்டிய அவசியமே இல்லை ஆனா என் மனசுல இருக்க சில விஷயங்களை உன் அம்மா சுமந்த வலிகளை உங்ககிட்ட பகிர்ந்துக்க இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது .

நானும் உன் அம்மாவும் ஒன்னா ஒரே ஊர்ல பிறந்து ஒன்னா படிச்சவங்க இது உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான் .
அவ கல்யணமாகி போன பிறகு அவளை நான் பார்த்தது 6 வருஷம் கழிச்சு

நான் மாஸ்டரா இருந்த ஹோட்டல்ல அதும் பாத்திரம் துலக்குற வேலைக்கு வந்திருந்தா .

அதை பாத்து நான் அடைஞ்ச வேதனைக்கு அளவே இல்லை ஏன்னா உங்க அம்மா வளர்ந்த விதமும் வாழ்ந்த வாழ்க்கையும் அப்படி .

விசாரிச்சபோது தான் தெரிஞ்சது உன் அப்பாக்கு குடி மற்றும் சூதாடற பழக்கமிருந்து உன் தாத்தா சொத்துகளையும் அழிச்சிட்டு கடன் தொல்லை தாங்காம தற்கொலை செய்துகொண்டதையும்

ஊர்ல கடன்காரங்க தொல்லை தாங்காம உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு சென்னைக்கு தலைமறைவா ஓடி வந்த கதையும் .
அப்போ உனக்கு 4 வயது சுமனுக்கு 2 வயது .

அவள அப்படி பாக்க முடியாம நான் சேர்த்து வச்ச சேமிப்பையும் உங்க அம்மாகிட்ட இருந்த கொஞ்ச நகைகளையும் வச்சு தள்ளு வண்டில தொடங்குனது தான் எங்களோட வாழ்க்கை .

நான் உங்க அம்மாவோட தங்குனது உங்க பாதுகாப்புக்கு தான் ஒரு பெண் தனியா தன்னோட பருவத்துல வாழ்க்கைய நடத்துறது அவ்வளவு சுலபமில்லை .
அதெல்லாம் சுமனுக்கு தெரியலனாலும் சதீஷ் உனக்கு தெரியும் நான் உங்க வீட்டுக்கு வருகிற வரை .
நீயே அதை சொல்லி அழுது இருக்க

மாமா நீங்க இல்லைனா ராத்திரியான பேய்ங்க வந்து கதவை தட்டுது பயத்துல தூக்கமே வராதுனு .

இந்த சமூகத்த பொறுத்த வரை ஒரு விஷயம் தனக்கு கிடைக்கலனா அதை தவறா பேசியே பழக்கபட்டுடுச்சு.

அது எங்க கதையிலையும் தவறவே இல்லை .அன்னைக்கு பேச ஆரம்பிச்சாங்க எங்க உறவை கொச்சை படுத்தி .இதோ மகராசி பிணமா படுத்திருந்த போதும் ஓயாம பேசிட்டே தான் இருந்துச்சு என்று சொல்லும் போதே
வேதனையில் அழுகையை அடக்கமுடியாது அவரின் கண்கள் குளமானது.

நான் கல்யாணம் பண்ணாததுக்கு காரணமும் இதுதான் அவ மட்டும் எங்களை எப்படி நல்ல விதமா புரிஞ்சுப்பா ஒரு வேளை அவளும் தப்பா எடுத்துட்டானா அங்க ஒரு பெண்ணோட வாழ்க்கை பழாபோகும் .
எனக்கு என் தோழியின் குடும்பமும் குழந்தைகளுமே போதும் இதை காவல் காக்குற நாயா காலத்துக்கும் இருந்துட்டேன் .

ஆனா, உன் அம்மா இதுக்காக பெருசா வருத்தபட்டது பெத்த பிள்ளைகளே தன்னை நம்பலையேனு தான் பல முறை சொல்லி அழுது இருக்கா என்கிட்ட.

இதுங்களுக்காக உன் வாழ்க்கையே தொலைச்சிட்டு நிக்குற ஆனா அவனுங்க உன்னை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளுறானுங்க பாருனு .

நீங்க சந்தேகபட்டது எங்க நட்பை மட்டுமல்ல உங்களை பெத்து எத்தனையோ கஷ்டத்துல போராடி இந்த சமுதாயத்துல சாதிச்சு சுத்தமானவளா வாழ்ந்த உங்க அம்மாவையும் தான்னு நீங்க புரிஞ்சுகிட்டா போதும் .

ஆண் பெண் தள்ளி இருந்து பேசுறது தான் நட்புனு இல்லை பக்கத்துலையே இருந்தாலும் பார்வையிலும் ஸ்பரிசத்திலும் விரசம் இல்லாம பழகுறதுதான் உண்மையான நட்பு .

இன்னைக்கு வரை எங்க நட்பு கலங்கமில்லாதது
எங்களை எத்தனையோ பேர் என்னென்னவோ சொல்லி இருக்காங்க ஆனா ஒரு நாளும் உன் அம்மா அதுக்கு காது கொடுத்ததே இல்லை.

நான் வருத்தபட்டு வீட்டை விட்டு வெளிய போறனு சொன்னாலும் .
எருமை அவனுங்க பேசுறங்கானு நீ வெளிய போனா அவனுக்கு தான் லாபம் மறுபடியும் ஒவ்வொருத்தனா வருவான் ஆளில்லாத வீட்டுல இவளை நாம கரெக்ட் பண்ணலாம்னு

அவன் பேசுறத பேசட்டும் நாம வாழுறதை வாழுவோம் இந்த உலகம் ஒருநாள் புரிஞ்சுக்கும் உண்மையான நட்புனா என்னனு சிரிச்சிட்டே சொல்லுவா .

அப்படி இருந்தவளும் அழுதது நீங்களே எங்களை புரிஞ்சுக்கலனுதான் .
இனியாவது புரிஞ்சுக்கோங்க .
இதோ இந்த எல்லா சொத்துமே உங்க பேர்ல தான் இருக்கு அதை உங்ககிட்டயே கொடுத்திடுறேன் .
ஆனா இந்த மாமாக்காக ஒரே ஒரு உதவி செய்யுங்க என்னை ஹோட்டல்ல ஒரு முளையில தங்கிக்க அனுமதிங்க போதும் .
எனக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லடானு சொல்லிட்டே அழுது கொண்டே தரையில் சாய்ந்தார்.

இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த சதீஷ் சுமனும் கண்கலங்க அழதொடங்கின
என் தாயை பழித்தவனை அடிக்க வேண்டிய நானே அந்த கூட்டத்தோடு சேர்ந்து பழி சொல்லிட்டனே என்று கதறியபடி சுந்தரதாதின் கால்களை பிடிதாதுக் கொண்டு எங்கள மன்னிச்சுடுங்க மாமா.

நாங்க சொல்புத்தியில சுய புத்திய இழந்து
உங்க தியாகத்தை கொச்சை படுத்திட்டோம் .
உங்களை போல ஒரு நணபர் கிடைச்சது எங்க அம்மா செய்த புண்ணியம் .
நாங்க பண்ண பாவத்துக்கு ஏழு ஜென்மம் எடுத்தாலும் விமோசனம் கிடைக்காது இனி உங்களுக்காக நாங்க இருப்போம் என்று சுந்தரத்தை தூக்கி அமர்த்தி ஆறதழுவி கொண்டனர் இருவரும் .


ஆண் பெண் நட்பு என்பது முள் வேலியில் பயிரிடப்பட்ட மல்லிகை தோட்டம் போன்றதே பார்ப்பவர்களுக்கு தவறாக இருந்தாலும் படரும் கொடி மட்டுமே தனக்கு கிடைத்த பாதுகாப்பை உணரும் .
என்றும் பிறரை வெளிபடையாக பார்த்து தவறாய் புரிந்து கொள்வதை தவிர்த்துவிடுங்கள் .
பெண் என்பவள் என்றுமே உறுதியானவள் தனக்கு என்ன தேவை எது பாதுகாப்பானது என்று உணருகிறாளோ அதை ஏற்றுக்கொள்ள தயங்குவதும் இல்லை பிறரின் ஏளன பேச்சுகளுக்கு செவி சாய்ப்பதுமில்லை தன் மீது தவறில்லை எனும் போது .
முள்வேலிய்ய் இவர்கள் நட்பு மரணம் வரை தொடர இதுவே காரணம் .
தன் பிள்ளைகளே ஊரார் விமர்சனங்களுக்கு செவி சாய்த்து இவர்களின் நட்பை தவறாய் புரிந்த போதிலும் தன் நட்பை விட்டு கொடுக்காது .

எழுதியவர் : மாயோன் (30-Nov-20, 8:50 pm)
சேர்த்தது : Mayon
பார்வை : 402

மேலே