உன் கன்னத்தை மட்டும்

உன்- பாதம் பட்ட மண்ணை
பக்தியோடு நான் எடுத்து.
பட்டுத் துணியில் முடிச்சிட்டு
பத்திரப் படுத்திடுவேனடா.!

நீ- படுத்துறங்கிய பாயை
உதறாமல் மடித்தெடுத்து.
மறவாது ஏக்கம் துரத்தும்
மருந்தென்று தலைக்கடியில் வைத்திடுவேனடா.!

உமது - மேனியில் பட்ட
பருத்தித் துண்டை மொட்டை
மாடி வெயிலில் காய்ந்திடாமல்
மாணிக்கமாய்க் காத்திடுவேனடா.!

நீ-கடித்து
துப்பிய நகங்களையும்
சொறிஞ்சி
கொட்டிய தலை முடிகளையும்
சேகரித்து பூச்சரங்களாய்க் கட்டி
என் மெத்தையின் அருகே
தொங்க விடுவேனடா.!

உனது-வியர்வைத் துளி
முத்தமிட்ட போர்வையிலே
மழைத்துளி பனித்துளி
விழுந்திடாமல்.
குடை விரித்து வைத்து
இதமான வெப்பத்தில்
உலர்த்தி எடுத்து மடித்திடுவேனடா.!

உமக்காக நான் செய்திடும்
சேவைகள் இவைகளடா.
நீ எனக்காக செய்து விடு
ஒன்றே ஒன்றடா..!

என் இதழ் பட்ட உன்
கன்னத்தை மட்டும்
மறவாமல் தவறாமல்
நீ பருக்களிடமும்
தெருப் பூக்களிடமும்
இருந்து பாது காத்தாலே போதுமடா ..!

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (3-Dec-20, 7:14 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : un kannathai mattum
பார்வை : 391

மேலே