நம் தாய் தமிழின் பெருமையும் வளமும்

ஆல், அரசு , வேம்பு , அத்தி ,மா , பலா ,வாழை , பூவரசு போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுந்தான் 'இலை " என்று பெயர் .

அகத்தி , பசலி , வல்லாரை , முருங்கை போன்றவற்றின் இலை " கீரை "ஆகின்றது .

மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் " பூண்டு" என்று பெயர் .

அறுகு, கோரை ,தர்ப்பை முதலியவைகளின் இலைகள் " புல்" என்று அழைக்கப்படுகின்றது .

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்கு பெயர் " தழை' ஆகும் .

நெல் , வரகு முதலியவற்றின் இலைகள் "தாள் " ஆகும் .

சப்பாத்தி , கள்ளி , தாழை இனங்களின் இலைகளுக்கு "மடல்' என்று பெயர் .

கரும்பு , நாணல் முதலியவற்றின் இலைகள் ' தோகை" என்று அழைக்கப்படுகின்றது .

தென்னை , கமுகு , பனை முதலியவற்றின் இலைகள் " ஓலை " என்று சொல்லப்படுகின்றன .

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள் இலக்கணம் மட்டுமல்ல , தாவரவியல் , அறிவியலும் அடங்கி இருக்கிறது நம் தமிழில் பொருள் வளம் மட்டுமல்ல , பேரழகும் கூட கொட்டிக் கிடக்கின்றது . சுவைக்கத்தான் ஆளில்லை

எழுதியவர் : வசிகரன் .க (5-Dec-20, 10:20 am)
பார்வை : 354

சிறந்த கட்டுரைகள்

மேலே