கிடைக்காத காதல்
கிடைக்காத உந்தன் காதலைத் தேடி
கிடைக்கும் என்று அலைந்த நானின்று
உணர்ந்தேன் நான்தேடி அலையும் காதல்
பாலைவ னத்தில் தண்ணீர்த் தேடியலைந்த
மானொன்று உச்சி வெய்யலில் மணலில்
கண்ட கானலை நீரென்று ஏமார்ந்தது போல
என்றுமே கிடைக்காத தென்று