உன் உயிர் போகும்வரை
இப்போது உன் அருகினில்
நான் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் எப்போதும்
உன் ஓர் உயிரினில்
என் ஆருயிர் உறைந்தே இருக்கும்...
உருகாமல் உருகி உன்னை
நேசித்துக் கொண்டே இருக்கும்..!
உன் உயிர் போகும்வரை
உன்னை இன்பமாய் வைத்துக்கொள்ளும்..
உன் உயிர் மறைந்த பின்பு
உன் நினைவோடு
நிம்மதியாய் வாழ்ந்து
மகிழ்வோடு மரணித்துச் செல்லும்!!!
❤️சேக் உதுமான்❤️