காதலைத் தொடர்வேன்

காதலைத் தொடர்வேன்

நேரிசை வெண்பா

அலருக்கஞ் சாத தலைவனும் நாணி
விலகி மறைந்தாரென் செய்ய --. புலம்பேன்
அலருக்கு நாணாத் தொடர்வேனென் காதல்
விலகும் தலைவன் விடேன்

ஊரார் கிசுகிசுவிற்கு அஞ்சாதே என்ற எந்தலைவனே நாணி எனைமறந்தார்.
அதனால் என்காதலுக்காக ஊராரின் அலரலுக்கு வெட்கப்பட மாட்டேன். அஞ்சாது என்
காதலைத் தொடரா மறைந்து விலகிய காதலரை விரைவில் சேர்வென்.


குறள் 9/7


..

எழுதியவர் : பழனிராஜன் (17-Dec-20, 8:09 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 81

மேலே