உலகை கடந்து சென்ற பயணத்தின் முடிவு
அன்று, கார்மேகம் சூழ்ந்திருக்க.... மழை பொழிய போகிறது.....
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இன் இசை அவனை நார்னியா அலமாரிக்குள் நுழைத்துவிட்டது.....அவன் வேறு ஒரு உலகத்திற்கு சென்றுவிட்டான்......அப்போது ஒரு அழைப்பு....யாரென்று பின்னாடி திரும்பி பார்த்தால்.... அட...என் வகுப்பு தோழன்.....வெகுநாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தான்....அவனே என் கண்முன் தோன்றியது...ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது....
தோழன் "என்ன டா....என்னலாம் மறந்துடபோல....."
அவன் "ஹே...அப்பிடியெல்லாம் இல்ல டா.....நமக்கு காலேஜ் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு....இருந்தாலும் வேல வேல னு அலஞ்சுகிட்டேயிருக்கேன் "
தோழன் "அதுவும் ரைட் தான்.... இந்த situation ல நெறய உழைச்சத்தான் survive பண்ண முடியும் ......சரி..உன்னோட partner எங்க?..."
அவன் " அவள பாக்கத்தான் போட்டுஇருக்கேன்....எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு......ஏதோ என்னோட life ல நடக்கப்போகுதுன்னு.....அதான் நாளைக்கு conference கு கூட போகாம அவள பாக்க போய்ட்டுஇருக்கேன்"
தோழன் " அவங்களுக்கு போனே பண்ணி பேசினியா "
அவன் " மார்னிங் பேசினேன் office கு கிளம்ப போறேன்னு சொன்னா....போய் பார்த்தா தான் தெரியும் "
தோழன் "சரி விடு...இனி எல்லாமே நல்ல காலம் தான் "
அப்போது போய்க்கொண்டிருந்த பேருந்து பழுதடைந்தது....
அவன் "என்ன இன்னைக்குன்னு பார்த்து பஸ் breakdown ஆகுது...."
தோழன் "ஹே...இதை நெனச்சா feel பண்ற....விடு...இது normal ஆன விஷயம் தான..."
அவன் "இல்ல டா எனக்கு பயம் ஆஹ் இருக்கு...அவளுக்கு என்னமோ ஆச்சோ னு தெரியலையே? "
தோழன் " ஏஏ... அவங்களுக்கு ஒன்னும் ஆயிருக்காது.... நீ அவங்களுக்கு call பண்ணி பாரு.."
அவன் call பண்ணினான்...
அவன் " Phone not reachable ல இருக்கு "
தோழன் " சரி...வேற பஸ் வருதா னு பார்ப்போம்...wait பண்ணு...."
அவன் "ஹே அங்க ஒரு பஸ் வருது... மதுரை தான் நினைக்கிறேன்.....
confirm மதுரை தான்...வா போலாம்.."
இருவரும் பேருந்தில் ஏறினர்...
தோழன் " அவங்களுக்கு ஒன்னும் ஆயிருக்காது...நீ எதுவும் feel பண்ணாத "
அவன் அழுதுகொண்டே " lockdown முடிஞ்சு 45 days கு அப்புறம் பார்க்கப்போறேன்... அவா வீட்ல தனியா இருந்துருப்பா.... நானும் work பிஸி ல சரியா பேசவும் இல்ல....நேத்து lockdown finish ஆனதும்...இன்னிக்கு தான் work போகபோறேன் னு சொன்னா....நானும் surprise ஆஹ் வீட்டுக்கு போலாம் னு நினைச்சு போய்ட்டுஇருக்கேன்....but ஏதோ தப்பு நடக்கபோரமாதிரி feel ஆஹ் இருக்கு "
தோழன் "அதெல்லாம் ஒன்னும் நடக்காது நீ எதுவும் feel பண்ணாத....be positive.."
அவனும் தன்னை தானே தேற்றிக்கொண்டான்.......
மதுரை ஆரப்பாளயம் பேருந்து நிலையத்தில் இறங்கினர்..அப்போது தான் நிறுத்தத்தில் நிறுத்திய தனது bike ஐ எடுத்துக்கொண்டு அவள் வீடு வரைக்கும் சென்றனர்...
அப்போது அவள் வீட்டிற்கு முன்னால் கூட்டம் கூடி இருந்தது...போது அவள் தோழி வந்து அவன் முன்பு அழுது நடந்தவற்றை கூறினாள்......
(நடந்தவற்றை - அவளுக்கு சொந்தமென்று யாரும் இல்லாததால்...தானே சம்பாரித்து கொள்பவள்..... இவளுக்கு உலகமே இவள் தோழியும் மற்றும் அவள் காதலனும் தான்....அவள் 45 நாட்கள் தனியாக இருந்தபோது வெளியே செல்லமுடியாமல்....தன்னை தானே வருத்திக்கொண்டு அவனும் அதிக வேலை பளு இருப்பதால் இவளையும் கண்டுகொள்ளாததால் அவள் ஒரு அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் இருந்த கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டாள்....)
அவள் இறந்து கிடப்பதை கண்ட அவன் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழும்போது தனது கட்டிலை விட்டு தரையில் விழுந்தான்.....
அப்போது தான் தெரிந்தது நடந்தவற்றை எல்லாம் கனவென்று....
சுற்றி பார்த்தால் வேறு ஊரில் தனக்கென ஒதுக்கப்பட்ட தன் ரூமில் இருந்தான்...
பயந்து போன அவன் அவசரம் அவசரமாய் கிளம்பிவிட்டு முதல் பஸ் ஐ பிடித்து தனது காதலியை பார்க்க கிளம்பிவிட்டான்....
- முற்றும் -