யாரய்யா நீ
யாராஇயா நீ?
@@@@@@@@
நான் பக்கத்து மாநிலத்தில பிரபல ரவுடிங்க. தமிழும் நல்லாத் தெரியுமுங்க. அங்க எனக்குத் தொல்லை தாங்க முடியலிங்க. அதான் தமிழ் நாட்டுக்கு வந்திர்த்ருக்கிறேன்.
@@@@@@@@@@
இப்ப இரவு மணி பன்னிரண்டு. எங்க கட்சில ரவுடிங்களச் சேர்க்க இதுதான் நல்ல நேரம்/. கடவுளாப் பாத்து உன்னை எங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வச்சிருக்கார்.
@@@@@@@@@
அது தெர்ஞ்சுதானுங்க ஐயா நான் இப்ப வந்திருக்கிறேன்.
@@@@@@@@
சரி. சரி. இனி நீ யாருக்கும் பயப்படாத, உன் பேரு என்ன?
@@@@@@@@
எம் பேரு சிக்கலு சின்னா அய்யா.
@@@@@@@@@
யோவ் சிவராசு இங்க வாய்யா.
@@@@@@@
இந்த ஆளைக்கூட்டிட்டு போயி புகைப்படம் எடுத்து அடையாள அட்டை தயார் பண்ணு. பேரு ‘சிக்கலார் சின்னா. ஒரு மாவட்டத்த் தலைவர் பதவிக்கு ஒருத்தரை நியமிக்கணும்னு சொன்னாய் அல்லவா. அந்தப் பதவியை இவருக்குக் கொடுத்துரு. இந்தத் தகவல் நாளைக்கு எல்லாச் செய்த்தாள்களிலும் தொலைக்காட்சிச் செய்திகளிலும் வெளியாகணும்.
@@@@@@@
சரிங்க அய்யா.
@@@@@@@@@
மொதல்ல இவருகூட நின்னு இவருக்கு நான் பொன்னாடை போர்த்தற மாதிரி ஒரு படம் எடுத்துக்கணும். அந்தப் படமும் செய்தியோட வெளியாகணும்.. சரி, சின்னா கையில ஒரு லட்சத்துக்கு ஒரு காசோலை கொடுத்திரு. நம்ம கட்சிக் கொடி பொருத்திய காரும் டிரைவரும் தயார் பண்ணிட்டு இவர் அடிஅயாள அட்டையில் என் கையொப்பம் வாங்கிட்டு இவரை அனுப்பிவை.
@@@@@@@@@@@@
(சின்னா தலைவர் காலில் விழுந்து) ஐயா, என்னை ஆசிர்வதிங்க.
@@@@@@@@@@@@
நல்லா இரு. நல்லா இரு. நீ தலைவரா இருக்கிற மாவட்டத்தில இருபத்தஞ்சாயிரம் பேரை நம்ம கட்சில உறுல்லினாராச் சேர்த்தா உனக்கு நம்ம கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பதவி தர்றேன்.
@@@@@@@@@
ஐயா, ஐயா, இதெல்லாம் என்னோட பூர்வஜென்மப் புண்ணியமுங்க ஐயா.
@@@@@@@@@@
சரி நீ சிவரசுகூடப் போ. இன்னொரு ரவுடி காத்திட்டு இருக்கிறாராம். அவரை விசாரிக்கணும்
@@@@@@@@