நம் கலாச்சாரம் காப்போம்

நம் கலாச்சாரம் காப்போம்
கோவி.தமிழ்ச்செல்வி, மலேசியா


பல்லின மக்கள் வாழும் நம் மலேசியத் திருநாட்டில் நாம் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பிற இனத்தவர்களுக்கு அடையாளம் காட்டும் முக்கிய பொறுப்பாளர்களாகிறோம்..அவை தான் நம் அடையாளங்கள்.அவை அழிந்து போயின் நாம் நம் அடையாளங்களை இழந்ததாகப் பொருள்படும்.இவ்வளவு காலம் கடந்து இப்போது தான் நாம் நம்மை அடையாளம் காட்ட வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம்!நம்மை இன்னும் பலர் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பது உண்மை; அது நமது தவறு தானே?
பேசும் மொழி, உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சடங்கு சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் யாவும் நம்மைப் படம் பிடித்துக் காட்டுவனவாக இருக்க வேண்டும்.பருவம் அறிந்து பயிர் செய்ய வேண்டும் ; .நம்மைப் பற்றிப் பிறர் அறியாமல் இருப்பதற்குக் காரணம் நாம் தான்! அவர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை நாம் வழங்குவதில்லை.
சாதாரண நாட்களை விட விழாக்காலங்களில் பிற இனத்தவரின் பார்வை நம் மீதுஅதிகம் பாய்கிறது.ஆகவே, இந்தக் காலத்தில் நாம் நமது சொத்தான பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதன் வழி அவர்களுக்கு நம்மை நாம் அடையாளம் காட்ட வேண்டும்.பல இடங்களில் நம் நம்பிக்கைகள் மிதிபடும் போது அவர்கள் கூறும் காரணம் “நாங்கள் அறியோம் ”என்பது தான்!அவர்களின் அறியாத் தனத்தைப் போக்க வேண்டிய கட்டாயச் சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
Ţơì¸Ùõ Àñʨ¸¸Ùõ Áì¸Ç¢ý ÁÉÁ¸¢ú×측¸ ÁðÎõ ¦¸¡ñ¼¡¼ôÀΞ¢ø¨Ä. இÐ ¾¡ý ¿ÁÐ À¡ÃõÀâÂõ , þо¡ý ¿ÁÐ ¸Ä¡îº¡Ãõ ±ýÀ¨¾ ¯Ä¸¢üÌô À¼õÀ¢ÊòÐì ¸¡ðÎÅÐõ ¿¢¨ÉçðÎÅÐõ þó¿¡§Ç !குறிப்பாகப் பிற இனத்தவருக்குப் புரியும் வண்ணம் நமது கொண்டாட்டங்கள் பொருள் கொண்டனவாக அமைய வேண்டும்.
Å£ðÊý ¾¢¨Ã¨Ä¸¨Ç Á¡üÚ¸¢§È¡õ.Òò¾õ Ò¾¢Â À¡½¢Â¢ø Ũ¸ Ũ¸Â¡ö ¨¾òÐ Á¡ðÊ Å¢ðÎ «ÆÌ À¡÷츢ý§È¡õ ( ¸¡ðθ¢ý§È¡õ). Å£ðÎò ¾ÇÅ¡¼í¸¨Çì ܼò §¾¨Å¢ýÈ¢ Á¡üÚ¸¢ý§È¡õ.«Ç×ìÌõ «¾¢¸Á¡É Àĸ¡Ãí¸¨Ç «Îì¸Î측ö ¦ºöÐ «Æ¸¢Â À¡ò¾¢Ãí¸Ç¢ý «Î츢 ¨ÅòÐ ¸ñ¸¡ðº¢ ¿¼òÐÅРӨȡÌÁ¡ ? þùÅñ½õ «¾¢¸ôÀÊÂ¡É , §¾¨ÅÂüÈ ¦ºÄ׸û ¦ºöÐ À¢ýÉ÷ ¸¼É¡Ç¢Â¡¸¢ «øÄø ÀÎÅÐ ¾ÌÁ¡?
இது தானா நமது சொத்து? தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களை முறையாக எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை அறிந்து அதன் படி துலங்க வேண்டும்.அடுக்கடுக்காய் அடுக்கி வைக்கும் பலகாரங்களில் எத்தனை பலகாரங்கள் நம் பலகாரங்கள்? அலுவலகங்களிலும் பள்ளியிலும் ஒரு மாதம் முன்னதாகவே பிற இனத்தவர்கள் சில மாதிரிப் பலகாரங்களைக் காட்டி வியாபாரம் செய்கின்றனர். நாமும் நட்பு முறை, நேரமின்மை கருதி அதிக விலையாக இருந்தாலும் கூட வாங்கிக் கொள்கிறோம். இங்கே மறைமுகமாக நம் கலாச்சாரத்தை நாமே குழி தோண்டி புதைக்க வகை செய்கிறோம்.நமது பண்டிகை காலங்களில் நம் பலகாரங்களையல்லவா பரிமாற வேண்டும்.
அவற்றை கொஞ்சம் சிரத்தை எடுத்து நாமே வீட்டில் செய்வதால் நம் அடுத்த தலைமுறையும் அவற்றைச் செய்யும் வழிமுறையை அறிந்து கொள்வர்; அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு செல்வர்.. ஆகவே, நமது பாரம்பரியம் தொடர்ந்து நிலை பெறும்.மேலும், ஒன்றாக ஒருவருக்கொருவர் உதவி செய்து பலகாரங்கள் தயார் செய்கையில் குடும்ப உறவு மேம்படுகிறது. முறுக்கு வகைகள், உருண்டை வகைகள், அதிரசம் போன்ற நம் பலகாரங்களையும், சமையலையும் பிற இனத்தவருக்குப் பரிமாறுவது அவசியம். அவர்கள் இல்லங்களில் தம் பண்பாட்டினை ஒட்டிய உணவுகள் தானே பரிமாறப்படுகின்றன.அதைக் கண்டாவது நாம் நம் நிலையை உணரலாமே!
அடுத்த நிலையில் உடைகள். பெருநாட்காலங்களில் அனைத்து இஸ்லாமியரும் அவர்களின் பாரம்பரிய உடையை மட்டுமே உடுத்துகின்றனர்.ஆனால், நாம் பிறர் கலாச்சாரத்தின் பால் மோகம் கொண்டு ஏதோ போக்கில் போய்க்கொண்டிருக்கிறோம்.மாறுவோம்.மாற்றத்தைக் கொண்டு வருவோம்.மற்ற நாட்களில் இல்லை என்றாலும் முக்கிய விழாக்காலங்களிலாவது நாம் நமது பாரம்பரிய உடைகளை அணிவோம்.அதையே நம் இளைய தலைமுறையினரையும் பின்பற்றச் செய்வோம். தற்போது நல்ல மாற்றங்களைக் காண முடிகிறது.ஆயினும் , இந்த விழிப்புணர்ச்சி போதாது.ஆலயங்களுக்குச் செல்லும் போதும் பாரம்பரிய உடையை மட்டும் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்வோம்.பஞ்சாபி ஆடை நமது பாரம்பரியமல்ல! அதிலும் கையில்லா சட்டைகளை அணிந்து கொண்டு மெல்லிய துணியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டு வரும் போக்கு மாற வேண்டும்.

நாம் உயர்ந்த பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதை உலகிற்குக் காட்டும் முன் நம்மைச் சுற்றி இருக்கும் அண்டை அயலாருக்குக் காட்டுவோம்.நம்மோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பிற இனத்தவருக்குக் காட்டுவோம்.அவர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாம் அறிந்து ,மதித்து நடப்பது போல், அவர்கள் செயல்பட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். இனி நம் கலாச்சாரம் தெரியாது அதனால் தவறு நடந்துவிட்து என்று கூறப்படும் வார்த்தைகள் இல்லாது போகச் செய்வோம்.வாழ்க நமது பண்பாடு; காப்போம் அதனை முழுமூச்சோடு !!!

எழுதியவர் : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ (6-Jan-21, 9:21 pm)
பார்வை : 400

சிறந்த கட்டுரைகள்

மேலே