இயற்கை
சதா தன்னை தன்னுடல் என்றே
எண்ணிக்கொண்டு அகந்தையில் உலவிவரும் மனிதர்
தன்னை மீறிய சக்தியொன்று இருப்பதை மறுப்பதேன்
ஒருநொடியில் விண்ணிலிருந்து மண்ணில் வீழ்ந்த
குறுங்கோள் அன்று 'ராக்காத' விலங்கினங்களை
இருந்த இடம் இல்லாது செய்துவிட்டது
நேற்றுகூட படித்தேன் நம்முலகின் அருகே
வான் வெளியில் பல 'சிறுகோள்கள்' உலவிவருகின்றனவாம்
கரணம் தப்பினால் மரணமே இதை
மனிதனே உன்னால் தவிர்க்க முடியாது
'சுனாமியைத்' தடுத்து நிறுத்த முடியாது
பூகம்பத்தையும் எரிமமலையின் சீற்றமும்
தடுக்கவே முடியாது..... பின் இயற்கையோடு
இறைவனை வேண்டி வாழவழி தேடாது
இருப்பதேன் மனிதா சொல்வாயா