அழகு
நடந்து வந்தால் நதி அழகு
ஓடி வந்து விழ அருவியழகு
நடந்து வருகையில் அன்னம் அழகு
துள்ளி துள்ளி வர மான்அழகு
தொகை விரித்து ஆடிவர மயூரமழகு
சிற்றிடையில் சிந்தடி போட்டுவர இவளழகு
சிந்தடி வெண்பா சிந்தைக்கு அழகு
கந்தனடி பத்தற்கு காட்டும் அகவழகு