உன் முகத்திற்கும் லில்லி மலருக்கும் கவிதை எழுதுவேன்
பூக்களின் புத்தகத்தில்
முல்லைக்கும் மல்லிகைக்கும் கவிதை எழுதுவேன்
புன்னகையின் புத்தகத்தில்
செவ்விதழுக்கும் முத்துக்களுக்கும் கவிதை எழுதுவேன்
வான்நிலவின் புத்தகத்தில்
உன் முகத்திற்கும் லில்லி மலருக்கும் கவிதை எழுதுவேன்
வான்முகிலின் புத்தகத்தில்
உன் விழிகளுக்கும் விழிமின்னலுக்கும் கவிதை எழுதுவேன்
என் நெஞ்சின் புத்தகத்தில்
நானா கவிதை எழுத வேண்டும் நீதானே எழுத வேண்டும் ?