வண்ணம் -119

வண்ணம் : 119
தான தான தானான தானத் தனதானா
தான தான தானான தானத் தனதானா
காத லோடு தேனான பாடற் புனைவேனே
காணும் போது காராக மாறிப் பொழிவேனே
தூது போக வான்மீனை நாடத் துணிவேனே
தோழி யோடு பேசாம லூடித் தவியேனே
பாதை மீது காணாது சோர்வுற் றலைவேனே
பாவை யோடு பூபாளம் பாடிக் கனவோடே
கோதி லாது பூமாலை சூடிக் கனிவோடே
கோதை நாண மார்போடு கூடித் தழுவேனோ ?
சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 11:11 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 13

மேலே