காதலது பிறந்திடுமோ

ஆடிடும் அரவங்கள் பாடிடுமோ
ஆலய சிலை ஆவினங்கள் கறந்திடுமோ
நூலின்றி எம்மொழியும் வளர்ந்திடுமோ
நூற்காமல் நூற்களும் கிடைத்திடுமோ
சுவையது நாவின்றி கிடைத்திடுமோ
நோயின்றி எவ்வுயிரும் வாழ்ந்திடுமோ
சோர்வுற்று நீள்தென்றல் சோர்ந்திடுமோ
சோழர்களின் கலை நுட்பம் மறைந்திடுமோ
விதையின்றி எப்பயிறும் முளைத்திடுமோ
காமம்மின்றி காதலது பிறந்திடுமோ
கருத்தில்லா வேலைக்கு வெற்றி வந்திடுமோ
பணமின்றி இனி வாழ்வு நகர்ந்திடுமோ
பாவம் என்று சொன்னால் உலகினி பயந்திடுமோ
அனைத்தையும் அறிந்தோர் அதிகம் பெருகிவிட்டர்
அளவில்லா தவறு செய்ய துணிந்துவிட்டர்
இளையோர் மூத்தோர் என்ற பேதம் துறந்துவிட்டர்
இயற்கைக்கு முரணாய் இன்பம்பெற பழக்கிக்கொண்டர்
களிறு வாயில் சிக்கிய கரும்பாய் இனி உலகம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (18-Jan-21, 9:52 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 47

மேலே