ஒப்பனையாய் பேசுவோரை

காற்றின் விசையினாலே கலன் இயக்க கற்றிடுவோம்
கரம்பென்ற நிலங்களிலே காடுகளை வளர்த்திடுவோம்
மயக்க நிலை மாந்தரை மண்ணிலே புதைத்திடுவோம்
ஏளனம் பேசுவோரை எல்லை படையில் சேர்த்திடுவோம்
தாமதித்து செய்வோருக்கு தண்ணீர் தர மறுத்திடுவோம்
ஆன்மீகத்தால் பிழைப்போருக்கு பணத்தினை தவிர்த்திடுவோம்
காமத்தில் கொழிப்போருக்கு காய்ச்சிய கம்பியால் மருந்திடுவோம்
கல்வியை விற்பவரின் பள்ளிகளை மாட்டுத் தொழுவமாக்குவோம்
நோயாளியிடம் விலைப்பேசும் மருத்துவமனைகளை இடித்துவிடுவோம்
அறனில்லா அரசியலோரை அமிலங்கொண்டு சுத்தம் செய்வோம்
கற்பனைத் திரை கதாநாயகர்களை காகித ஓடமாய் எண்ணிடுவோம்
ஒப்பனையாய் பேசுவோரை உப்பில்லா உணவாய் உணர்ந்திடுவோம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Jan-21, 10:11 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 44

மேலே