உன் நினைவும் எனக்கு சுகம்தான் 555

***உன் நினைவும் எனக்கு சுகம்தான் 555 ***




என்னவளே...




தென்றல் சுகம்தான்
வேகமெடுத்தால்...

அந்த மேகமும்
கலைந்து செல்லும்...

காதல்வலி சுகம்தான்
கூடிக்கொண்டே போனால்...

கண்களும் கரையும்...

கதிரவனையே மூடிமறைக்கும்
மேகத்தைக்கூட...

தென்றல் மென்மையாக
நகர்த்தி செல்லும்...

பாறையான
என் நெஞ்சில்...

காதல் பூ
எரிந்து
பனிக்கட்டியாக்கினாய்...

என்னைவிட்டு விலகி
உருகவைக்கிறாய் என் இதயத்தை...

இரவுநேர
நிலவை போல...

உன் நினைவும் எனக்கு
சிலநேரங்களில் சுகத்தை கொடுக்கும்...


பல நேரங்களில்
வலிகளையே கொடுக்கும்...

உயிர் உருகி
மண்ணுக்குள் போவதற்குள்...

நீ என் மனதிற்கு நெருக்கமாக
வந்துவிடடி கண்ணே.....



எழுதியவர் : முதல் பூ பெ.மணி (20-Jan-21, 9:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1532

மேலே