இன்றும் நீ என் நினைவில் வந்து செல்கிறாய் 555
***நீ என் நினைவில் வந்து செல்கிறாய் 555 ***
அன்பே...
பேரூராட்சி மேல்நிலை பள்ளியில்
சேர்க்கைக்காக நீயும் நானும்...
ஊரும் பேரும் தெரியாத
உன்னை கண்டதும்...
என்னில்
ஒரு சலனம்...
பள்ளி நாட்களில்
நீயும் நானும்...
ஓரிரு வார்த்தைகளுக்கு
மேல்
பேசிகொண்டதில்லை...
பேசிகொண்டதில்லை...
எத்தனை காதல் கடிதங்கள்
உனக்காக நான் எழுதியது...
பெயரில்லை என்றாலும்
நான்தான் என்று நீ அறிவாய்...
நீ பலமுறை
கிழித்தெறிந்திருக்கிறாய்...
கடிதத்திற்கும் எனக்கும்
சம்மதம் இல்லாததை போல...
புன்னகையோடு உன்னை
கடந்து செல்வேன்...
கடிதத்தை கிழித்தெறிந்த
நீ ஒருமுறைகூட...
என்னருகில் வந்து என்
மனதை நோகடிக்கவில்லை...
அதனால்தான் என்னவோ
காலங்கள் கடந்தும்...
உனக்கு கொடுக்க படாத கடிதத்தை
பார்க்கும் போதெல்லாம்...
நீ என் நினைவில்
வந்து செல்கிறாய்...
முதன் முதலில் என் மனதில்
நின்றவள் நீதானே கண்ணே.....

