நூலறுந்த பட்டமாய் நான் தவிக்கிறேன் 555

***நூலறுந்த பட்டமாய் நான் தவிக்கிறேன் 555 ***


என்னுயிரே...


உறவொன்று இல்லாமல்
தவிக்கும் வலியை விட...

உறவிருந்தும் இல்லாததை
போல் தவிக்கும்...

தவிப்பில் வரும்
வலி கொடியதடி...

பாறையில் செங்குத்தாய்
வளரும் மரமும்...

பள்ளத்தாக்கில் பூத்து
குலுங்கும் மலர்கொடியும்...

சூரிய ஒளியை
தேடுவதை போல...

அன்பெனும் ஆயுதத்தால்
என்னை மேலே உயர்த்தினாய்...

காலத்தின் சதியா
காதலின் சதியா ...

நீ
என்னை பிரிந்தது...

நூலறுந்த பட்டமாய்
நான் தவிக்கிறேன்...

காற்றின் திசையில்
எட்டு திசை இருக்கும்...

பூமியில் நான் செல்வது
ஒன்பதாவது திசையடி...

என் கண்முன்னே
வந்துவிடடி மீண்டும்...

உன் அன்பை எனக்கு
கொடுத்துவிடடி கண்ணே...

தவிக்கிறேன் நானும்
தனிமையில் இங்கு.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Jan-21, 9:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 817

மேலே