நாணநயம்
கடை விரித்தேன் கொள்வாரில்லையென
கம்பீரமாய் அமர்ந்திருக்கும் நன்றியுள்ள
நாலுகால் நண்பனுக்கு தெரியவில்லை
நன்றியும் விசுவாசமும் மட்டும் இங்கு
நாணயத்தை சம்பாதிக்க நல்வழி இல்லை
நாலுபேர் பார்க்கும் படி நாகரீக விளம்பரமும்
நச்சென்று ஈர்க்கும்படி அலங்காரமும்
நம்மவர்க்கு ஏற்றபடி பேசும் வாய்வளமுமே
கொண்டு செல்லும் நாணயத்தை வானுயர மென.