விலையில்லாப் பொங்கல்

விலையில்லாப் பொங்கல்*
🐃🐃🐃🐃🐃🐃🐂🐂🐂🐂🐂🐃🐃🐃🐃🐃
மக்கள் என்ற மாடுபூட்டி ஆட்சி என்ற கழப்பை கொண்டு

திட்டம் என்ற நுகத்தடியை சட்டம் போட்டு கழுத்தில் வைத்து

நுகத் தடியின் வலி மறக்க மதுக்கடையும் திறந்து வைத்து

வரி என்ற நீர் பாய்ச்சி வளர்த்து கண்ட பெருவிளைச்சல்

ஊழல் என்ற குதிருக்குள் உணவுப்பொருளை குவித்துக் கொண்டு

இலவசமாய் வைக்கோலை எல்லா மாட்டையும் திங்க வைத்து

பொங்கலோ பொங்கல் என்று
பொங்கியது தைப்பொங்கல்
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

எழுதியவர் : க.செல்வராசு (21-Jan-21, 6:56 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vilaiyillap pongal
பார்வை : 46

மேலே