சமுதாயக் கவிதை

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

"எங்கள் ஆட்சியில்
கட்டாயக்கல்வி அனைவருக்கும்... குழந்தை தொழிலாளர்
கொடுமையை ஒழிப்போம"் என்று தலைப்புச் செய்தியாக வந்த பத்திரிக்கையை
பேருந்து நிலையத்தில்
விற்றுக்கொண்டு வருகிறான்
"பத்துவயது சிறுவன்.....!!!"

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

குருடனே!
பார்க்க
முடியவில்லையே என்று
கவலை படாதே!
நாட்டில் நடக்கும்
கொடுமைகளைப் பார்த்தால்
அதைவிட
அதிகமாக கவலைப்படுவாய்....

செவிடனே!
கேட்க முடியவில்லையே என்று வருத்தப்படாதே !
நாட்டு மக்களின்
பேச்சை கேட்டால்
அதை விட
அதிகமாக வருத்தப்படுவாய்...
கேட்பவர்கள் மட்டும்
எதைத்தான் தட்டிக் கேட்டார்கள்...?

ஊமையானவனே!
பேச
முடியவில்லையே என்று
வேதனைப் படாதே !
பேசுபவர்கள் மட்டும்
பெரிதாக
என்ன சாதித்துவிட்டார் ?
பேசுவதோடு சரி ....!

கால் கை ஊனம் என்று
கண்ணீர் வடிக்காதே
உனக்காவது
வெளியில்தான் ஊனம்
நூற்றில் தொண்ணூறு பேருக்கு
உள்ளே இருக்கும்
"மனமே " ஊனமாக.....!!!

💥💥💥💥💥💥💥💥💥💥💥

கவலையோடு
அமர்ந்தவனை
சிறிது நேரம்
தாலாட்டி
தூங்க வைத்தது
"பேருந்து....."

*கவிதை ரசிகன்*


🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-Jan-21, 9:15 pm)
பார்வை : 119

மேலே