உன்னை சுற்றியே என் நினைவுகள் 555

***உன்னை சுற்றியே என் நினைவுகள் 555 ***


விழியழகே...


உன்னிடம் பல மணித்துளிகள்
பேசி சிரித்தாலும்...கைபேசியை வைத்தவுடன்
இன்னும் கொஞ்ச நேரம்...

நீ என்னை கொஞ்சி
இருக்கலாம் என்று தோனுதடி...

உன் பாதம் பட்ட பாதையெங்கும்
பூத்து குலுங்குதடி...


உன் பார்வை பட்ட
நான்
காத்திருக்கிறேனடி...


நீ சுற்றி திரிந்த உன்
வீட்டு தோட்டம்...

இன்று நந்தவனமாக

மாறிருக்குதடி...

பட்டாம் பூச்சியும்
நானும் நந்தவனத்தில்...

என்னை போலவே உன்

இதழ்களில் தே
ன் குடிக்க...

சிரிக்கும் பூக்களில் எல்லாம்

உன் முகம் கா
ண்கிறேன்...

உன் கல்லூரி காலத்தை
முடித்துவிட்டு...

நீ எப்போது
நேரில் வருவாய்...

தேன்குடிக்க
பட்டாம் பூச்சியும்...

தோளில் சாய்ந்துகொள்ள
நானும் காத்திருக்கிறோம் உனக்காக.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Jan-21, 9:03 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 591

மேலே