கமுகின் பழமொத்த அதரம்

கமுகுமரத் தோப்பில் அவளைக் கண்டேன்
கமுகைச் சுற்றிய வெற்றிலைக்கு கொடிபோல்
கொடியிடையாள் அவள் நின்றிருந்தாள் கமுகின்
சிவந்த கனியின் அழகை ரசித்தாளோ தெரியாது
ஆனால் அப்போது அங்கு கமுகு பழத்தைத்
தின்னவந்த கிளியொன்று கீழே நின்றிருந்த
இவளின் சிவந்த அதரத்தை கமுகின்
சிவப்பு பழமென்று எண்ணி மேலிருந்து
கீழே வந்து அவள் அதரத்தைச் சுற்றி
சுற்றி வந்து முடிவில் அவள்
தோளில் வந்து அமர்ந்ததுவே
இப்படி இயற்கையோடு ஒன்றிய
அவள் ஒழுகும் அழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jan-21, 7:48 am)
பார்வை : 67

மேலே