நாட்காட்டி

தலைப்பு- நாட்காட்டி....

நாளும் நகர்ந்து போகும் நாட்களை எங்களுக்கு ஆதியிலிருந்து அறிமுகம் செய்தாய்,
இன்றும் கடந்த நாட்களின் நினைவு சிறகை மனதில் விரித்து பறக்க செய்கிறாய்,
ஆனந்த மழையில் நனைய வைத்து மகிழ்ச்சியில் பூக்க வைக்கிறாய்,
தினம் ஒவ்வொரு இதழ்கள் உதிரும் போது ஆயுளின் நாட்களையும் சேர்த்து உதிர்கிறாய்,
மின்னல் காடாய் மனதில் முளைத்து மவுன பாதையை கிழித்து விடுகிறாய்,
முத்துக்களை விழுங்கிய சின்ன சிப்பியாய் எங்களுக்குள் நினைவாக புதைந்து போகிறாய்,
கடந்து போன நாட்களின்
கற்பனை கனவில் வண்ணத்து பூச்சிகளுடன் ஊர்வலம் போக சொல்கிறாய்,
உன்னை தொடர்ந்த நாட்களை வெரும் நினைவு நாள் சுவடுகளாய் ஆக்கி விட்டாய்,
தாளை கிழிக்கும் போது இப்படி ஒரு நாள் ஏன் வருகிறது என எண்ண வைக்கிறாய்,
மறக்க நினைக்கும் நிகழ்வையும் மறக்க முடியாத
நாட்களில் தந்து சிரிக்கிறாய்,
மனிதன் வாழும் நாட்களை..... எண்ணிக்கையில் தந்து மிரட்டுகிறாய்,
இந்த நிலையற்ற நாட்கள் போனால் மிண்டும் வராது என உணர வைக்கிறாய்,
ஒருநாள் விடுமுறைக்கு ஏங்கியவர்க்கு நீண்ட விடுமுறை அளித்து குடும்ப உறவுகளின் அருமையை உணர உதவுகிறாய்,
உன் தாள் கிழிக்க நேரமின்றி ஓடியவர்களை.... உன்னைமட்டுமே! கிழிக்க
வைக்கிறாய்,
வாழ்வில் இதுவரை கிழித்தது போக இன்னும் எத்தனை இதழ் கிழிக்க வேண்டும் என யோசிக்க வைக்கிறாய்,
மக்களின் எல்லா நாட்களையும் வெறுமையாக்கி விடுமுறை நாட்கள் போறும் என்னும் நிலைக்கு தள்ளி விட்டாய்,
இந்த ஊரடங்கு காலம் எப்போது முடியுமென குடும்ப தலைவிகளை ஏக்கத்துடன் உன்னை பார்க்க வைத்துவிட்டாய்,
பறவைப் போல் வீட்டு சிறையில் கைப் பேசியில் அடைப்பட்ட மனிதர்களுக்கு என்று சுதந்திரம் என காத்திருக்க செய்த நாட்காட்டியே!

விமலா.

எழுதியவர் : விமலா (22-Jan-21, 11:48 pm)
சேர்த்தது : Vimala
Tanglish : naatkaatti
பார்வை : 37

மேலே