வாழ்க்கை பயணம்

மனிதனின் வாழ்க்கை
பயணம் என்பது ....

திக்குத் தெரியாத காட்டில்
திசைகளை
தேடி திரிபவனின்
மனநிலை போல்தான்...!!

கிடைத்த வழியில்
நேர்மையாக
பயணம் செய்பவன்
நிம்மதியாக வாழ்கிறான்..!!

கிடைத்த வழியினை விடுத்து
குறுக்கு வழியில் நடக்க
நினைப்பவன் தவிப்புடனே
பயணம் செய்கிறான்..!!

எந்த வழியிலும் செல்வதற்கு
முயற்சிகள் எதுவும்
செய்யாதவன் மூலையில்
முடங்கியே கிடக்கிறான்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Jan-21, 2:15 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaazhkkai payanam
பார்வை : 401

மேலே