மழைநீர் உயிர்நீரே

அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

விசும்பினில் மின்னல் மின்னித்
தெரிந்திடும் அங்கும் இங்கும்

கொசுமழைத் தூறல் தூறிப்
பொழிந்திடும் கொஞ்சம் கொஞ்சம்

பிசுபிசு வென்றத் தூறல்
எதற்கென நீயே சாதே


விசும்புநீர். கொஞ்சம் கொஞ்சம்
எனினும துயிரின் நீரே

(கவிஞர் பழனிராஜன்)

எழுதியவர் : பழனிராஜன் (23-Jan-21, 2:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே