இன்றைய கண்ணகியாய் நீயிரு.....!
பருவத்தின் இன்னல்கள்
பகலவனின் சுடர்களிலும்
சுட்டெரிக்கும் வாழ்கையினை
தோழியே உன் காலடியில்
காதலெனும் படுகுழிகள்
பல தோன்றும்
விழுந்திடதே......
நாளை உன் வாழ்வை
சீரழிக்க திட்டமிடும்
சூழ்ச்சிகள் பலவுண்டு
இப்பூமியில்....
கயவரின் கையில்
காதலெனும் ஆயுதம்....
உன் கண்ணிரெண்டில்
காவலெனும் கணை கொண்டு
காத்திடு உன் கற்பை
நாளை உலகம் உன்னை
பழிகூற வழியின்றி.....
இன்றைய கண்ணகியாய்
நீ இருந்து.......!