அற்புதமான கவிதை

☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

பெண்ணே !
நீ என்மீது
காதல் பார்வையை
வீசினாய் என்பதற்காக
நானும்
பதிலுக்கு
காதல் பார்வையை
உன் மீது வீச முடியாது
ஏனெனில் ?
கல்யாணம் முடியாத
தங்கைகள்
என்னை நம்பி....!

💠💠💠💠💠💠💠💠💠💠💠

தீபாவளிக்கு
பட்டாசு
வாங்கி
தரவில்லை என்பதற்காக
உன் அப்பாவின் மீது
கோபப்படாதே....!
பட்டாசு கம்பெனிக்கு
வேலைக்கு அனுப்பும் அப்பாக்களுக்கு மத்தியில்
உன் அப்பா
உன்னை
பள்ளிக்கு
அனுப்புகிறார் என்பதை நினைத்து
மகிழ்ச்சி கொள்....!

💠💠💠💠💠💠💠💠💠💠💠
கிளியே போல்
நாமும் அழகாக இருந்திருந்தால் நம்மையும் எல்லோரும் விரும்புவார்கள் என்று
காகம் வருந்தியது...
கம்பி போட்ட கூண்டுக்குள் காலமெல்லாம்
அடைந்து வாழ்வது
எவ்வளவு
கொடுமையானது என்பது
அழகைப் பெற்ற
கிளிக்குத்தானே!
தெரியும்.......?

💠💠💠💠💠💠💠💠💠💠💠

தாய்க்கும் தந்தைக்கும்
மகனாகவும்.....
மனைவிக்கு கணவனாகவும்..... குழந்தைகளுக்கு
அப்பாவாகவும்.....
இருந்ததால்
அவன்
"அவனுக்கு அவனாக"
இருக்க முடியாமல் போனது....!

*கவிதை ரசிகன்*

☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

எழுதியவர் : கவிதை ரசிகன் (26-Jan-21, 9:01 pm)
பார்வை : 76

மேலே