மென்மையான புன்னகைக்கு சொந்தமடா நீ 555
***மென்மையான புன்னகைக்கு சொந்தமடா நீ 555 ***
அன்பு மகன் /மகள்...
கோடை வெயில்
கொளுத்தினாலும் ...
உனக்கு
குடையாக நான் வருவேன்...
அடை மழையில்
நீ நனைந்தால்...
உனக்கு முன் எனக்கு
ஜீரம் வருமே...
உன்னை வயிற்றில்
சுமக்காத எனக்கு...
உன்னை நெஞ்சிலும் தோளிலும்
சுமக்கும் பாக்கியம் நீ கொடுத்தாய்...
என் கைக்குள் நீ
இருக்க வேண்டாம்...
உன் கைக்குள்
நான்
நான்
இருப்பேனடா என்றும்...
மென்மையில் நீ
பூக்களை
பூக்களை
தோற்கடிக்க வேண்டும்...
புன்னகையில் நீ
உலகை
உலகை
தோற்கடிக்க வேண்டும்...
நீ கேட்பதை
இல்லையென
சொல்லாமல்...
சொல்லாமல்...
வாங்கிக்கொடுக்கும் வலிமை
மட்டும் எனக்கு போதும்...
உனக்கு
கஷ்டங்கள் தெரியாமல்...
உன்னை
சிகரம் தொடவைப்பேன்...
கஷ்டங்களை
சந்திக்கவிட்டு நீ சாதிக்க...
ஊன்றுகோலாய்
நான் இருப்பேன்...
நான்
மண்ணில் உதிரும்வரை...
உன்னை
என் நெஞ்சில் சுமப்பேன்...
என் செல்வமே.....