என் இனியவளே

என் இனியவளே
என் கண்ணுக்குள்
என் கண்மணியாக
நீ இருக்கிறாய் ...!!

அதனால் என் பார்வை
எப்போதும்
உன்னை சுற்றியே
வலம் வருகிறது ...!!

உன்னை நினைத்து
நான் உறங்குவதில்லை
அழுவதுமில்லை
காரணம் ...!!

நான் உறங்கினால்
நீ மறைந்து விடுவாய் ..

நான் அழுதால்
நீ கரைந்து விடுவாய் ..

என் கண்மணியே
உன்னை என் கண்ணுக்குள்
வைத்து காத்து வருகிறேன்
இல்லை ...இல்லை ..
பூஜித்து வருகிறேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Jan-21, 11:48 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en iniyavalae
பார்வை : 543

மேலே