மெல்ல வரையும் இதழ்காதல் ஓவியம்

மெல்லிய பூவிழியில் கோபுரப் பொற்தீபம்
மெல்ல வரையும் இதழ்காதல் ஓவியம்
அல்லிக் குளத்தினில் அந்திச்சந் ரோதயம்
நல்லதோர் கீதம்நெஞ் சில்

----இன்னிசை வெண்பா வடிவம்

மெல்லிய பூவிழியில் கோபுரப் பொற்தீபம்
மெல்லிய பூவிதழ் ஓவியம்-- சில்லெனும்
அல்லிக் குளத்தினில் அந்திச்சந் ரோதயம்
நல்லதோர் கீதம்நெஞ் சில்

-----நேரிசை வெண்பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jan-21, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே