மயிலே

எழுத அரிதான எழிலாளே !!
இதயம் பறித்த விழியாளே !!
விழுதாய்ப் படர் குழலாளே !!
யாழே குழையும் மொழியாளே !!

மயிலனைய நங்கையுன்
சாயல் கண்டு,
மயில்களும் நீ மயிலென
மையல் கொண்டு,
தோகை மயில் கூட்டமெல்லாம்,
கோதை உன் மருங்கில் கூடுதடி..

துள்ளி ஓடும் புள்ளிமான்கள்,
கள்ளி உன் கண்கள் பார்த்து,
புள்ளி மானென மயங்கி,
மான் குழாம் உன்னருகே,
மருகுவதென்ன விந்தையடி.

சீர்மிகு நடைபயில ஓடிவரும்
சிங்கார அன்னம்,
சிதையாத உன் பாதச் சுவட்டில்
சிறு அடி இட்டு,
சின்னநடை பயிலுதடி சிங்காரி.

பொழுதெல்லாம் இவைகள்
உன்னருகில் கூடிவர,
காதலினால் நான் கண்டு
பழுதானதென் இதயம்.

ச.தீபன்
94435 51706



.

எழுதியவர் : தீபன் (28-Jan-21, 6:12 am)
சேர்த்தது : Deepan
Tanglish : mayile
பார்வை : 199

மேலே