வந்தனா மந்தனா

ஏன்டா தம்பி, உம் பொண்ணுங்க (இ)ரண்டு பேருக்கும் என்னடா பேருங்களை வச்ச?

########

என்ன அண்ணே தெரியாத மாதிரி கேக்கறீங்களே. மூத்தவ 'வந்தனா' இளைய
பொண்ணுப் பேரு மந்தனா?

##########
ஏதுக்குடா தம்பி அந்தப் பேருங்களை வச்ச?

########
ஏண்ணே?

##########
வந்தனா அவகூடப் படிக்கிற பொண்ணுங்க யாரு வந்து கூப்புட்டாலும் "இதோ வந்திட்டேன்டி"னு சொல்லிட்டு ஊரு சுத்திட்டு வர்றா? வீட்டில ஒரு வேலையும் செய்யறதில்லையாம். உன் மனைவி மலர்விழி சொல்லது. சரியாப் படிக்கிறதில்லையாம்.
#######
எல்லாம் அவள் வளர்ந்தா சரியாகிடும் அண்ணே.
#########
அது சரி. அந்த 'மந்தனா'ப் புள்ள ரொம்ப மந்தித்தனமா இருக்கிறாளாம். படிக்கிறதில்லையாம். வெளையாடறதில்லையாம். வீட்டிலயும் ஒரு வேலையும் செய்யறதில்லையாம். எதுக்கத்தான் அந்த இந்திப் பேருங்களை உம் பொண்ணுங்களுக்கு வச்சயோ?
########
அண்ணே இந்தக் கால தமிழர் நாகரிகப்படி கொழந்தைகளுக்கும் நல்ல அர்த்தம் உள்ள பேருங்கள வச்சிருக்கிறோம்.
###$$#######
என்னமோ போ.தமிழர்கள் அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்களை வைக்க வெட்கப்படறாங்க..
■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆■■
Vandana = salute, Adorationபெ
Mandana = cheerful

எழுதியவர் : மலர் (29-Jan-21, 6:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 87

மேலே