குடும்பம் ஒரு கோயில்🙏

குடும்பம் ஒரு கோயில்🙏

சுகந்தியும், சுகுமாரும் மூன்று வருட காதலர்கள். இரண்டு பேரும் நடுத்தர வர்க்கம். சுகுமாருக்கு பொறுப்பு மிக அதிகம். காரணம் அவன் தான் குடும்பத்தில் மூத்த பிள்ளை. அவன் அப்பா அவனுடைய பள்ளி பருவத்திலேயே தவறியதால் குடும்ப பாரம் முழுவதும் அவன் தலையில் சுமத்தப்பட்டது. அப்படி, இப்படி என்று அடிபட்டு, மிதிபட்டு, ஆடி, ஓடி, கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைமைக்கு தன் குடும்பத்தை உயர்த்திய அவனுக்கு கல்யான வயதில் ஒரு தங்கை , பொறியியல் படிக்கும் ஒரு தம்பி. தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சுகுமாருக்கு, சமீப கால இலக்கு தன் தங்கையை நல்ல இடம் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும்  என்பதே ஆகும்.

சுகந்தி ஒரே பெண், பி.காம் படித்து முடித்த அவள், ஒரு தனியார் நிறுவனத்தில் அகவுடண்ட்டாக பணி புரிகிறாள். அவளுடைய அம்மா ஹவுஸ் வைப், அப்பா சமீபத்தில் தான் தனியார் கம்பனி ஒன்றில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

" என்ன சுகந்தி எதுக்கு அவசரமா வர என்னைய சொன்ன"
" அப்பாகிட்ட நம்ம லவ் மேட்டர நேற்று ராத்திரி பேசினேன்"
" என்ன சொன்னாரு, ஒத்துகினாரா, சொல்லு.. ஒத்துகினாரா..."
" உன்னை மறக்க சொல்லிட்டார்..."
"சுகந்தி, நீ என்ன சொல்ர..."
" அவர் பதில் நான் எதிர் பார்த்த ஒன்று தான்"
" அப்ப, நம்ம காதலுக்கு முடிவு"
" முடிவு உன் கையில"
" என் கையிலயா"
" ஆமா"
" என்ன, சொல்ற"
" நீ நேரா வந்து, எங்கப்பா கிட்ட பொண்ணு
கேளு"
" விளையாடுகிறாயா சுகந்தி"
" சீரயஸ்ஸா தான் சொல்றேன்"
" முதல்ல அவரு உங்க வீட்டுகுள்ள என்ன அலோ பண்ணுவாரா"
" அதை நான் பாத்துக்கிறேன்"
" எதை நான் அவர் கையால அடி வாங்க போறதையா"
" அது மாதிரி எதுவும் நடக்காது, பயப்படாதே"
" நீ சொல்லும் போதே ஒரு டவுட் உன் கண்ல தெரியுதே"
" சுகுமார், நான் சொல்றத தெளிவா கேளு, அப்பா எனக்கு ரொம்ப சீரியஸ்ஸா மாபிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு, அவர் ரொம்ப ஆர்தோடக்ஸ் ( orthodox), அவர் ஒரு சாதி வெறியர், காதல் மேல நம்பிக்கை இல்லாதவர், ஆனா என் மேல நூறு சதவிகிதம் இல்ல ஆயிரம் சதவிகிதம் பாசம் வைத்துள்ளார், இது தான் உண்மை. நீ வந்து நேர்ல என்னய பொண்ணு கேட்டா ஒரு டிவிஸ்ட் வரலாம், வராமலும் போகலாம், அவர் இறங்கி வந்தாலும் வரலாம் அல்ல வராமலும் போகலாம், நீ மொதல்ல தைரியமா எங்க வீட்டுக்கு வா..."
" ஓ.கே. வரேன்".

மாலை நான்கு மணி. காலிங் பெல் அடித்தது. யஸ், சுகுமார் தான்.
கதவை திறந்த சுகந்திக்கு சந்தோஷம், சுகுமார் அவள் வீட்டு வாயலில்.
" வா, சுகுமார், யு ஆர் வெல்கம்", இங்க உட்காரு", ஒரு நிமிஷம் அப்பா, அம்மாவை வர சொல்ரேன். சுகுமார் ஏக பதட்டத்தில் இருந்தான். உள்ளங்கையே வேர்த்துவிட்டது.
தண்ணீர் தாகம் எடுத்தது.
" அப்பா, இவர் சுகுமார்"
பதிலுக்கு சுகுமார் எழுந்து வணக்கம் தெரிவித்தான். கோப பார்வையை தன் மகளின் மீது காட்டிய சுகத்தியின் அப்பா,
சுகுமாரை ஒரு சம்பரதாயதுக்கு கூட வா என்று உபசரிக்காமல், " தம்பி, என் பொண்ணு எல்லாம் எங்கிட்ட சொன்னா, இந்த காதல், கத்திரிக்காய் எனக்கு சுத்தமா பிடிக்காது, ஒரே வார்த்தை, சுத்தி வலைக்க விரும்பல,  நல்ல படியா சொல்றேன், நீ என் பெண்ணோட பழகறத இந்த நிமிஷத்தில இருந்து நிறுத்திடு. அவ்வளவு தான் என்னால முடிவா சொல்ல முடியும். நீ எதுக்க வந்திருப்ப என்பதெல்லாம் எனக்கு தெரிந்தாலும், நீ இனிமே கூறபோகும் சமாதான பேச்சு கேட்க நான் ஒரு நொடி கூட தயாரா இல்ல. என்னை இந்த விஷயத்தில அந்த ஆண்டவனே வந்தாலும் மாற்ற முடியாது.
டோண்டு வேஸ்ட் மை டைம், அண்டு ஆல்ஸோ யுவர் டைம். நீ கிளம்பலாம்" என்று கூறிவிட்டு மிக கோபமாக, முகம் சிவந்தவராக தன் வீட்டின் உள்ளே வேகமாக எழுந்து சென்றுவிட்டார்.
மிக பெரிய அவமானம் சுமந்தவனாக கூணி,குறுகி சுகுமார் அங்கிருந்து வெளியேறினான். தர்மசங்கடத்தின் உச்சத்தில் சுகந்தி, நடந்தது ஏதும் புரியாதவராக சுகந்தியின் அம்மா.


மறுதினம்.
" சாரி, சாரி... அயம் எக்ஸ்டிரிம்லி( extremely ) சாரி சுகுமார்"
"............"
சாரி...சாரி..
" ......."
" சுகுமார், இப்படி பதில் சொல்லாம அமைதியா இருந்தா எப்படி"
" என்ன செய்ய சொல்ற"
" ஐ, அண்டர்ஸ்டுட் யுவர் பிராப்ளம்", பட் லவ்ல , இதெல்லாம் சகஜம்"
" சரி நம்ம லவ்வுக்கு முடிவு தான் என்ன"
" ரொம்ப பிலேங்க்கா( blank) இருக்கு, ஒரு முடிவுக்கு வர முடியில சுகுமார்"
" கொஞ்ச நாள் ஆர போடலாமா"
" இல்ல சுகுமார், அப்பா ரொம்ப ஸென்ஸிடிவ், ரொம்ப ஸ்ப்பீடா ஆக்ட் பண்ணுவாரு, ஒரு மாசத்துல என் மேரேஜ் அரேன்ஞ் பண்ணிடுவாரு"
" அவர் ஸ்பீடா போகலாம் , நீ ஒத்துக்கனும் இல்ல"
" அது கெரக்ட்டு, ஆனா ரொம்ப நாள் தள்ளி போட முடியாது, மிஞ்சி, மிஞ்சி போனா ஒரு ஆறு மாசம்"
" அப்ப, நீ ஒன்னு செய்யேன்"
"என்ன"
" இப்படியே எங்க வீட்டுக்கு வந்திடு, எங்கம்மாவை நான் ஒத்துக்க வச்சுடுவேன்,  என் தங்கச்சி கல்யாணம், அது முடிந்த அடுத்த நாளே, நம்ம இரண்டு பேருக்கும் எங்கம்மா சம்மதத்துடன் டும்...டும் தான்"
" இப்படி கேக்க நல்லா இருக்கும், ஆனா நடைமுறைக்கு சாத்தியமா"
" ஏன் சாத்தியம் இல்ல"
" சரி, நான் வீட்டுக்கு வரேன் வச்சிக்கோ அக்கம் , பக்கம் நான் யாருன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவ"
" அதை எங்கம்மா சூப்பரா சமாளிச்சுடுவாங்க, அதை பத்தி நீ கவலை பட வேண்டாம், என்ன இப்பவே என் கூட என் வீட்டுக்கு வரியா"
" சுகுமார், சும்மா ஆசைய கிளப்பாத.
நான் உன்னை என் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன், ஆனா என்னுடைய அப்பா, அம்மா சம்மதத்துடன் தான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன். ஒரு பேச்சுக்கு நான்  உன்னுடன் உன்  வீட்டுக்கு போயிட்டேன்னு எங்கப்பா கேள்வி பட்டா அடுத்த நிமிஷம் அவர் சூஸையிடு நிச்சயம் பண்ணிப்பார். அவ்வளவு ரோஷம், வைராக்கியம் குணம் உள்ளவர். என் அப்பா."
" சுகந்தி நான் ஒன்னு சொல்லவா"
" என்ன சுகுமார்"
" உங்கப்பா சொன்ன மாதிரி என்னை நீ மறந்திடு"
" ........."
சுகுமார் அப்படி சொன்னதும், இதயத்தில் ஈட்டி பாய்ந்தவளாய் சுகந்தி தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

இரண்டு மாதம் கழித்து,
சுகுமார், "நேற்று உன் தங்கைய பார்க்க வந்த இடம் ஓகே சொல்லிட்டாங்களா"
"........."
" சுகுமார்"
" இல்ல, சுகந்தி, என் சத்திக்கு மேல நகை போட சொல்றாங்க"
" நான் வேண்ணா என்னோட நகைய கொடுக்கிறேன்"
" இல்ல சுகந்தி, அந்த இடம் நான் டிராப் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்"
" அப்ப வேற வரன்..."
" ஆமா, நிச்சயமா இன்னும் மூனு மாசத்துல அவ கல்யாணத்த முடிச்சே ஆகனும், இரண்டு வருஷ போராட்டம்"
" கவலைய விடு, நிச்சயம் நீ நினைக்கிற மாதிரி உன் தங்கை கல்யாணம் நல்லபடியா நடக்கும்"
" சரி நம்ம விஷயத்துக்கு வருவோம், எனி இப்புரூவ்மண்ட், உங்கப்பா கிட்ட"
" ஒரு சேஞ்சும் இல்ல, எப்பவும் என் ஜாதகத்தை கையில வச்சிட்டு அலையிராரு" , வர ஞாயிற்றுகிழமை ஒரு வரன் என் பார்க்க வராங்கலாம்"
" ஆல் த பெஸ்ட்"
" சுகுமார், நான் சீரயஸ்ஸா பீல் பண்ணி சொல்றேன், நீ கேசுவலா, ஆல் த பெஸ்ட் எனக்கு சொல்ர"
" என்னால என்ன பண்ண முடியும்"
" உன்னால முடியும்"
" என்ன சொல்ற"
" என்ன பொண்ணு பார்க்க வர பையன் கிட்ட, என்ன பார்க்க வரும் முன்னமே, நீ என்னை லவ் பண்ற விஷயம் லீக் பண்ணிடு"
" சரி, சுகந்தி இந்த பையன் கிட்ட சொல்றேன்னு வச்சுக்கோ, அப்புறம் உங்கப்பா, உனக்கு வரனே பார்க்காம விட்டுவிடுவாரா, அப்ப உன்னை பொண்ணு பார்க்க வர எல்லா பையன் கிட்டயும் உன்னை லவ் பண்றதா சொல்ல முடியுமா, பிராக்டிகலா யோசி சுகந்தி"
" அப்ப, எவனோ வந்து பார்க்கட்டும், பையன் பிடிக்கிலைன்னு சொல்லிடறேன்"
" சரி தான், ஆனா இதுவும் டெம்பரவரி சொல்யூசன் தான்"
" நீயே சொல்யூசன் சொல்லேன்"
" நான் சொல்ற சொல்யூசன் சற்றே வித்தியாசமானது"
" என்ன அப்படி ஒரு வித்தியாசமான சொல்யூசன்"
" நீ, உங்கப்பாகிட்ட நான் லைப்புல( life) கல்யாணமே பண்ணிக்க போறது இல்லன்னு தீர்க்கமா சொல்லனும், அவர் ஏன் என்று கேள்வி கேட்பார், ஆமாம்பா , நான் லவ் பண்ண பையன மறந்துட்டேன், ஆனா வேற ஒரு எந்த பையனையும் கல்ணாணம் செய்ய கூடாதுன்னு முடிவு பண்ணிடேன்னு சொல்லிடு, அவரும் நீ ஏதொ ஒரு சோகத்துல சொல்றன்னு கொஞ்ச நாள் உன்னை விட்டு பிடிப்பாரு."
" சரி, அப்படியே சொல்றேன், அப்புறம்"
" அப்புறம் என்ன அப்புறம், நம்ம இரண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்காம"
" கல்யாணமே பண்ணிகாம"
"கல்யாணமே பண்ணிகாம, 'லிவ்விங் டு கெதர்' (living together) வாழ்க்கையை தொடரலாம்"
" உனக்கு பைத்தியமா"
" சுகந்தி, உங்கப்பா எதிர்த்துகிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிற தைரியம் உனக்கு இல்ல, அவர் இந்த ஜன்மத்துல நம்ம காதலுக்கு சம்மதம் தெரிவிப்பாரா, அதுவும் நடக்காது, அப்ப நம்ம இந்த ரூட்ட தான் பாலோ செய்யனும், இந்த 'லிவ்விங் டு கெதர்' பற்றி உனக்கு தெரியும் இல்ல"
" சுகுமார், ஒரு பக்கம் நீ குடும்பம், அம்மா, தங்கை, தம்பி, பொறுப்புன்னு ஒரு சுமைதாங்கியாவே இருக்கிற, ஆனா நீ கொஞ்சம் முன்னாடி நீ என் கிட்ட பேசினது, ரொம்ப புரட்சியா இருக்கு. ஆனா அது மாதிரி வாழ்வது ரொம்ப தப்பு. அது என்ன பொருத்த வரைக்கும்,  ஒரு கள்ள உறவு தான். தப்பான தாளம் தான். "
" நீ சொல்றது சரி தான், ஆனா நம்ம எதிர்காலம் ..."
" நான் உன்னை சின்சியரா லவ் பண்ரேன், ஆனா, இந்த லிவ்விங் டு கெதர் கருமம் எல்லாம் சுத்த அம்பக், நான் எந்த விதத்திலும் எக்கப்பா, எங்கம்மாவை ஏமாத்த விரும்பல. என் கல்யாணம் அவங்க சம்மதத்தோட தான் நடக்கனும்"
" ஒரு விஷயம் சொல்லவா சுகந்தி"
" சொல்லு, இந்த லிவ்விங் டு கெதர் கலாச்சாரம், நம்ம சங்க கால பாடல்லயே இருக்கே"
" அப்படியா, அது என்ன சொல்லு"
"அது....

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே 
(குறுந்தொகை)


யாய் = என்தாய்; ஞாய் = உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைநீர்)
முன்பின் தெரியாத ஒருவனிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன் நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன்.

" எல்லாம் சரி, ஆனா சங்ககால பாடல் கேட்க நல்லா தான் இருக்கும். அதனால கல்யாணம் பண்ணிக்காம ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது மிக பெரிய தவறு. அது எந்த காலமா இருந்தாலும் கலாச்சார தவறு. "
" அப்ப அந்த மாதிரி நிறைய பேர் வெளி நாட்டுலையும், ஏன் நம் நாட்டுலையும் வாழ்கிறார்களே"
" தெரியும், ஆனா அது ஒரு போலியான வாழ்க்கை, நான் ஒன்னு சொல்லட்டுமா சுகுமார், நாகரீகம் அடைந்த இந்த மனுசன் கண்டுபிடிச்சதுல ரொம்ப அற்புதமானது
" குடும்பம் என்ற கோட்பாடு" என்பது தான். சுகுமார், குடும்பம் ஒரு கோயில். குடும்பம் ஒரு பல்கலைகழகம். இந்த சமுதாயதோட உயரே நம்ம நாட்டோட குடும்பங்களில் தான் இருக்கு. நானோ, நீயோ இந்த உலகத்துல பிறக்க காரணம் நம்ம அப்பா, அம்மா போட்ட பிச்சை தான். இது வரைக்கும் நம்மலோட வாழ்க்கை அவங்களோட ஆசிர்வாதம். சோ, நோ கண்புயூஸன் ( confusion), நம்ம இரண்டு பேர் கல்யானம் லவ், அரேஞ்சு மேரேஜ் தான். நம்ம திருமணம் இரண்டு குடும்ப சம்மதத்தோட தான் நடக்கும். அதுவரைக்கும் காத்திருப்போம். நம்ம காதல் உறுதியானது சுகுமார். நிச்சயம் நீ தான் என் புருஷன். நான் தான் உன் பெண்டாட்டி. எக்கப்பா மனசுல கடவுள் புகுந்து நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பார். எனக்கு ஆசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.
" சுகந்தி, ஐ லவ் யூ"
- பாலு.

எழுதியவர் : பாலு (30-Jan-21, 5:06 am)
சேர்த்தது : balu
பார்வை : 1192

மேலே