அவள்💋

அவள்💋

நித்திரையில் முத்திரை பதிக்க
சித்திரை வானில் முழுநிலவாய் அவள். முந்தானையை மேகமென காற்றில் பறக்கவிட்டு கலை பொக்கிஷமாய்
என் எதிரில் அவள்.
காத்திருந்த கண்களுக்கு
விருந்தளித்த வண்ண ஓவியமாய் அவள். எண்ணங்களுக்கு திண்ணம் தீட்டிய திகட்டாத தேனமுது அவள்.
பிறை நிலவை பியர்தெடுத்து புருவம் வைத்து கொண்ட அவள்.
கானகத்து  தாமரைக் குளத்தில் துள்ளி விளையாடும் கயல் வழி கொண்ட அவள். முக்கனியை தேனில் குழைத்த தெவிட்டாத மாதுளை இதழ் சிந்தும் அவள்.
தரையோடு விளையாடிய வானமாய் கோடைகால கானல் நீராய் இடை கொண்ட அவள்.
தம்புராவை தன்வசப்படுத்தி நித்தம் இன்னிசை எழுப்பும் இந்த சுரங்கம் அவள்.
தாமரை பாதம் கொண்டு வண்ண தோகை விரித்தாடும் அழகு மயில் அவள்.
காலதேவன் படைத்திட்ட கலைப்பெட்டகம் அவள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (31-Jan-21, 8:17 pm)
சேர்த்தது : balu
பார்வை : 393

மேலே