கல்லறை சுவாசம்

அவள் துயில் கொள்கிறாள்....
ஆயிரம் ரோஜாக்கள் அவளை அலங்கரிக்க
அத்தனை முள்களும் என் உயிர் நெரிக்க
அவள் துயில் கொள்கிறாள்...

அழகிய வாழ்வியலை அறிமுகம் செய்தவள்
அன்பினால் என்னை ஆட்சி புரிந்தவள்
சுவாசம் மறந்து துயில் கொள்கிறாள்...

மெய்யென்ற தேகம் பொய் என்று போன பின்னும்
வாழ்வின் இன்பம் இருளறையில் சென்ற பின்னும்
நான் உயிரின்றி சுவாசிக்கிறேன்
அனுதினமும் அவள் கல்லறையில்....

எழுதியவர் : சீதளா தேவி வீரமணி (2-Feb-21, 1:07 pm)
சேர்த்தது : சீதளாதேவி வீரமணி
Tanglish : kallarai suvaasam
பார்வை : 262

மேலே