தாய்மை

தாய்மை

உடலால் உயிர் வளர்த்து
உள்ளத்தால் கண் மலர்ந்து
அடிவயிறு கணக்கையிலே
அமிர்தமும் பகையாகி
ஐந்து மாதம் கடக்கும் வரை
அகுட்டல், குமட்டல் எத்தனையோ!

அத்தனையும் ஏற்று கொண்டு
தன்னை காக்க மறந்தாலும்
தன்னில் ஜனித்த
தன் சிசுவின் உயிர் காக்க
மாதம் தவறாது
மருத்துவம் சென்று
நடக்கும் திறனின்றி
நாளை எண்ணி காத்திருந்து;
பத்தாம் மாதம்
இடுப்பு பகுதியில் இடியாய் வலி எடுக்க
பிள்ளை பேறுகாண
மருத்துவம் சென்று
அழுகையும், புலம்பலும் சேர்ந்து
துடித்து, சிசுவில் மெல்லிய
அழுகுரல் கேட்க தான்பட்ட
அத்தனை வேதனையும் பறந்து போக
மழலையின் முகம் காண

துடிக்கும் தாய் மனது
அல்லும் பகலும் விழித்திருந்து
அன்பு சிசுவின் உடல்காத்து
பசி அறிந்து பாலூட்டி
பத்தியமும் பல இருந்து
அத்தனை சுமையையும்
சுகமாய் ஏற்கும் தாய் உள்ளம்.

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (2-Feb-21, 8:41 pm)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
Tanglish : thaimai
பார்வை : 1636

மேலே