செவ்வாய் மழலைப் பூவே
அவ்வையின் வெண்பா அழகினில் வந்தவளே
கொவ்வை இதழில்பல் லில்லாபொக் கையழகே
ஒவ்வுதல் சாத்தியமோ ஓவியனுக் கென்செல்லம்
சவ்வுமிட்டாய் நோஅழா தே
----தங்கலீஷ் வெண்பா
அவ்வையின் வெண்பா அழகினில் வந்தவளே
கொவ்வை இதழில்பல் லில்லாபொக் கையழகே
ஒவ்வுதல் சாத்தியமோ ஓவியனுக் கென்செல்லம்
செவ்வாய் மழலைப்பூ வே
----தூய தமிழ் வெண்பா