அழகென்று எதை பாடுவேன் அழகனே
ஊழி காற்றில்
ஊழ்வினை
அறுக்க
உலா வரும்
குழி விழும் கன்னழகா...jQuery17109312602513298947_1612507839182
ஆழி அலையதனில் கலிங்க நர்த்தனமிடும்
ஆடலழகா ..??
இராதைக்கு மோகம் தரும்
குழலிசைக்கும்
இதழழகா....??
மயில் தோகைச் சூடி நிற்கும் கருத்த முடியழகா...??
முத்து தெரிக்கும் பவளவாய்
சிரிப்பழகா....??
கோபியர் மனம் கவரும்
கார் வண்ண மேனியழகா...??
வேண்டினோர் வாழ்வில் இருள்
கலையும்
மின்மினி விழியழகா...??
அழகெல்லாம் அழகழகாய்
உன்னிடமே அழகாய் இருக்க
பின்
அழகென்று எதை நான்
பாடுவேன் எம் அழகனே....!!