முகநூல் பதிவு 295
சிறு வயதில் எனக்கு சின்னத் தாத்தா போட்ட மனக்கணக்கு......
ஒரு குறுநில மன்னரிடம் 40 குதிரைகள் இருந்தன.... அதை குதிரை லாயத்தில் வரிசைக்கு 15 குதிரை இருக்கும் படி சதுரவடிவில் கட்டிவைக்க உத்தரவிட்டார்.... தினமும் அரண்மனையை சுற்றி வரும்போது குதிரை லாயத்திற்கும் தவறாமல் வந்து குதிரைகளை எண்ணுவார் ..... சதுரத்தின் நான்கு மூலையிலும் நின்று ஒவ்வொரு வரிசையிலும் குதிரைகள் 15 இருக்கின்றனவா என்று பார்த்து விட்டுச் சென்றுவிடுவார் ......
இதை நோட்டம் விட்டத் திருடன் ஒருவன்.... ஒருநாள் இந்த நாற்பது குதிரைகளுடன் 8 குதிரைகளை சேர்த்து கட்டிவிட்டுச் சென்றுவிட்டான்..... இப்போது 48 குதிரைகள் லாயத்தில் இருந்தன..... ஆனால் இரவு வழக்கம்போல வந்து குதிரைகளை நான்கு மூலைகளிலும் நின்று மன்னர் எண்ணும்போது ..... சரியாக ஒவ்வொரு வரிசையிலும் 15 குதிரைகளே இருந்தன.....
அடுத்தநாள் அதே திருடன் லாயத்தில் தான் கட்டிய 8 குதிரைகளுடன் மன்னரின் 8 குதிரைகளையும் சேர்த்துக் களவாடிச் சென்று விட்டான் ..... இப்போது லாயத்தில் 32 குதிரைகளே இருந்தது..... அன்று இரவும் மன்னர் நான்கு மூலைகளிலும் நின்று குதிரைகளை எண்ணினார்..... அப்போதும் ஒவ்வொரு வரிசையிலும் 15 குதிரைகள் சரியாக இருந்தன.
அப்படியென்றால் அந்தத் திருடன் 48ஆக இருந்த போதும் களவாடியப்பின் 32ஆக இருந்த போதும் குதிரைகளை எவ்வாறு கட்டிச் சென்றான் ....????
விடை சரியாக சொல்பவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு....!
( எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க அனுமதி இல்லை)