பூக்கண்ணி

ஏம்மா கோவிச்சிட்டு வந்துட்ட. உன் வீட்டுக்காரர் உன்னை அடிச்சிட்டாரா?
#########
அடிச்சாக்கூட நான் பொறுத்துக்குவேன்..ஆனா அவரு என்னைக் கண்டபடி திட்டறதப் பொறுக்க முடியலம்மா. அதான் கொழந்தையை எடுத்துட்டு வந்துட்டேன்.
###########
எதுக்கு திட்டுனாரு?
########
என்னை மட்டும் திட்டுலம்மா. உங்களையும் பட்டிக்காத கைநாட்டுங்க.
###########
ஏம்மா நாங்க கைநாட்டுகளா? நான் பத்தாம் வகுப்பு படிச்சவ. உன் அப்பா மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். நமக்கு இருபது ஏக்கரா நன்செய்.நிலம் இருக்குது..அதில நாங்க இயற்கை விவசாயம் செய்யறோம். அதனாலதான் உங்ஙப்பா மேற்கொண்டு படிகாக விரும்பல. நீ பொறியியல் பட்டம் வாங்கினவ..உன் வீட்டுக்காரர் மாசம் (இ)ரண்டு (இ)லட்சம் சம்பாதிக்கறவரு. எங்களோட வருச வருமானம் ஐம்பது இலட்சம். ஆடுகள் இருநூறு, கறவை மாடுகள் இருபது, காளைகள் அஞ்சு கோழிப்பண்ணை, பால் கறக்கும் எருமைகள் இருபது எல்லாம் நம்ம பண்ணையில இருக்குது. அது இல்லாம மூணு டிராக்டர் மூணு. மாட்டு வண்டி நாலு. பத்து இலட்சத்திற்கு வாங்கின காரு. புல்லட் மோட்டார் சைக்கிள் அஞ்சு. ஸ்கூட்டி இரண்டு. சைக்கிள் பத்து..நம்ம பண்ணையால முப்பது குடும்பம் பிழைக்குது. நமக்கு என்னடி.கொறை? நாங்களா.கைநாட்டு, பட்டிக்காடு?
#########
சரி வேறென்ன சொல்லித் திட்டினாரு?
#######
உங்க ரண்டு பேருக்கும் தமிழ்ப் பற்று இல்லையாம். தமிழர்களுக்கு அடையாளமே இந்திப் பேருங்களை வச்சுக்கிறதுதானாம்..இந்தக் காலத் தமிழர் நாகரிகம் தெரியாதவங்களாம். எனக்கு 'மலர்விழி'னு அழகான பேரு வச்சிருக்கறீங்க..அவரு என்னை 'பூக்கண்ணி, பூக்கண்ணி'னு கிண்டல் பண்ணறாரு.
##########
சரி, சரி மலர். அழவேண்டாம். நாளைக்கு நானும் அப்பாவும் உன் அண்ணனை வரச்சொல்வி உங்க வீட்டுக்குப் போயி உன் கணவருக்கு புரிய வச்சா திருந்திருவாறு.
####################################

எழுதியவர் : மலர் (6-Feb-21, 7:12 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 130

மேலே