தாமரை அன்னத்திற்கு அளித்த விதிவிலக்கு
நெல்லுக்கு நீர் நின்றால்தான் விளையும்
தேயிலைக்கு நீர் சரிந்து ஓடினால்தான் விளையும்
தடாகத் தாமரை நீர் அமைதியில் நிற்பதையே விரும்பும்
தன்னழகை தான் ரசித்திட உதவும் கண்ணாடி அன்றோ தடாகம்
கலைத்து நீந்த தாமரை அன்னத்திற்கு அளித்த விதிவிலக்கு !