நீலவானமும் காற்றும் காத்திருக்கும்

குயிலுக்கு அலகில் இசை இருக்கும்
குருவிக்கு அலகில் அரிசிமணி இருக்கும்
மயிலுக்கு அலகில் அழகிருக்கும்
கொக்கிற்கு அலகில் மீன் இருக்கும்
கழுகின் அலகோ வான் முகட்டைத் தொட்டிருக்கும்
பறவைகள் அனைத்திற்கும் அழகிய அழகும் இருசிறகும் இருக்கும்
பறந்திட நீலவானமும் காற்றும் காத்திருக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Feb-21, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே